அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் இணைந்த அ.ம.மு.க.,வினர்

Added : ஜூன் 17, 2019
Advertisement

சிவகாசி : சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.ம.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.ம.மு.க., படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் ஏராளமான அ.ம.மு.க., வினர் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன் அ.ம.மு.க., வில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் இணைந்தார். இந்நிலையில் சாத்துார், சிவகாசி, ராஜபாளையம் ஒன்றியங்களை சேர்ந்த அ.ம.மு.க., வினர் 300 பேர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் மன்னன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ராஜா, சிவகாசி எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் ரஞ்சித்கோசி, மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் சரவணன், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணை தலைவர் இந்திரா உள்பட 300 பேர் வரை அ.தி.மு.க., வில் இணைந்தனர். சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் உடன் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X