பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பிரிவினைவாதிகளுக்கு
வெளிநாடுகளிலிருந்து நிதி

புதுடில்லி:'ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது. பிரிவினைவாத தலைவர்கள் இந்த நிதியை தங்கள் சுய நலனுக்கு பயன்படுத்துகின்றனர்' என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிவினைவாதிகளுக்கு,வெளிநாடுகளிலிருந்து,நிதி


ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் சில பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களை கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. இதில் வெளியான

தகவல்கள் குறித்து புலனாய்வு அமைப்பு வெளி யிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பிரிவினைவாத அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் நிதி வருகிறது.


ஜம்மு - காஷ்மீர் மக்களின் உணர்வுகளை துாண்டி விட்டு அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவது பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்கும்படி துாண்டுவது போன்றவற்றுக்காக இந்த நிதி பிரிவினைவாத அமைப்புகளுக்கு வருகிறது.அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து தான் அதிக நிதி வருகிறது. பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தஆஷியா அண்ட்ராபி என்ற பெண்ணிடம் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது.


இதில் அந்த பெண் பாகிஸ்தானில் இருந்து தனக்கு வந்த நிதியை தன் சொந்த நலனுக்கு

Advertisement

பயன்படுத்துவது தெரிய வந்தது. அந்த பெண்ணின் மகன் மலேஷி யாவில் படிப்ப தாகவும் இதற்கான செலவை பாகிஸ்தானில் இருந்து வந்த நிதியின் மூலம் மேற்கொள்வ தாகவும் தெரிய வந்துள்ளது. இதேபோல் ஷபீர் ஷா என்ற பிரிவினைவாத தலைவனிடம் நடத்திய விசாரணையில் தனக்கு வந்த நிதியில் ஜம்மு - காஷ்மீரில் பல இடங்களில் அவன் சொத்துக் களை வாங்கி குவித்ததும் அம்பலமாகி உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201919:50:58 IST Report Abuse

Rajagopalகையில் திருவோடை ஏந்திக்கொண்டு அலையும் பாகிஸ்தானுக்கு இந்தத் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கப் பணம் எங்கிருந்து வருகிறது?

Rate this:
Srinath Babu KSD - Madurai,இந்தியா
17-ஜூன்-201916:07:43 IST Report Abuse

Srinath Babu KSDகாஷ்மீருக்கு மட்டுமே வருகுது தமிழ்நாட்டுக்கும் நிறைய்ய வருகுது

Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
17-ஜூன்-201912:52:58 IST Report Abuse

Ramalingam Shanmugam... ALSO LIKE THIS

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X