சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தண்ணீர் பஞ்சத்துக்கு ஆட்சியாளர்களே காரணம்
வலைதளங்களில் வறுத்தெடுக்கும், 'நெட்டிசன்கள்'

தமிழகம் முழுவதும், கடும் வறட்சி காரணமாக, தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இது
குறித்து, நமது நாளிதழில், தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

தண்ணீர்,பஞ்சத்துக்கு,ஆட்சியாளர்களே,காரணம்,சமூக வலைதளங்களில்,வறுத்தெடுக்கும்,'நெட்டிசன்கள்'
தண்ணீரின்றி மக்கள் படும் அவதியை, சமூக வலைதளங்களில், 'நெட்டிசன்கள்' கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக, 'தவிக்கும் தமிழ்நாடு; தாகத்தில் தமிழகம்' என்ற வாசகங்கள் பரவி வருகின்றன.

அதில், 'நெட்டிசன்கள்' தெரிவித்துள்ள கருத்துக்கள்:
கோகுலகிருஷ்ணன்: இப்போதைய தேவை மழை மட்டுமே; இங்கிலாந்தில் பெய்யும் மழை, சென்னைக்கு வர வேண்டும். மழையே நாங்கள் காத்திருக்கிறோம். தயவு செய்து இங்கே வா.
துரைமுருகன் பாண்டியன்: தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக் காரணம், ஆண்டவன் இல்ல; நம்மை ஆண்டவர்கள்; அதானது, ஆட்சியாளர்கள் தான் காரணம்.
ரமணன்: 'தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்'னு சொல்லிட்டே இருந்தீங்க. இப்போ, தண்ணியில்லாத தலைநகரமாகவே மாறியிருக்கு...

தி கிங்: ஒரு தனியார் நிறுவனத்தால், தண்ணீர் தர முடிகிறது; நம்மிடம் வரி வாங்கும் அரசால், ஏன் தர முடியவில்லை.

பாலகுருசிவம்: ஆற்று மணலை பாதுகாத்து,

ஏரி குளத்தை பராமரித்து, மழை நீரை சரியாக சேமித்து வைக்க வேண்டும். நீர் மேலாண்மை மட்டுமின்றி, தமிழகத்தின் மேல், முழு அக்கறை வேண்டும். காமராஜர் சிந்தனையில், 10 சதவீதம் இருந்தாலே போதும்.

உலகளந்தான்: 1,000 ஆண்டுகளுக்கு முன், 'நீரின்றி அமையாது உலகு' என்று உணர்ந்த இனத்தில் பிறந்தவர்களுக்கு, நீரை பாதுகாக்க தவறியதன் வினை சோகம்.தமிழன் சத்யா: நீர் மேலாண்மை, நீர் நிலைகள் பராமரிப்பு, நீரின் தேவை, இது குறித்தெல்லாம், எவ்வித அக்கறையும், அடிப்படைப் புரிதலும் இல்லாத ஆட்சியே, திராவிட ஆட்சி. 50 ஆண்டு களாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்களால் தான், தமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்துள்ளது.

சீமான் கார்த்திக்: குடிநீர், 2 சதவீதம் தான் உள்ளது. அதை, 20 சதவீதமாக உயர்த்துவது எப்படி என்று சிந்திக்காவிட்டால், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று சிந்தித்தவனே, உலகின் முதல் துரோக சிந்தனையாளன்.

தர்மராஜ் பழனி: எதைப் பற்றியும் கவலைப்படா மல், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளும், சுயநலவாதிகளுக்கு, எத்தனை கோடிகள் கொடுத்தாலும், ஒரு சொட்டு தண்ணீரை, இயற்கை இன்றி செயற்கையாக, நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்பது, இப்போதாவது புரியும்.திருநெல்வேலி விசிறிகள்: தாமிரபரணி ஆத்தங்கரையில இருக்கும் மக்களுக்கே, இந்த நிலைமை என்றால், ராதாபுரம், நாங்குனேரி, திசையன்விளை போன்ற வறட்சியானஇடங்களை, நினைச்சு பாருங்க...

தோழர் ஆனந்துாரான்: எங்க ஊரு ராமநாடு. குடிக்க தண்ணியில்லா சீமநாடு. இருபோகம் விளைந்த நாடு. டெல்டாவுக்கு பிறகு, அரிசி உற்பத்தியில், இரண்டாம் இடம். எங்க திருவாடானை ஊரின் பெயரோ ஓடைக்குளம். ஆனால், ஒரு சொட்டு தண்ணி இல்லாத

Advertisement

குளமாகி போச்சு. இதற்கு அரசு என்ன செய்யப் போகிறது?


சதீஷ்: 'மெர்சல்' திரைப்படத்தில் சொன்னதுபோல், காசுக்கு தண்ணீர் விக்கிற ஊரு உருப்படாது. காசுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை, தமிழகம் இன்னும் நிறைய சிரமங்களை, அனுபவித்தே ஆக வேண்டும்.

நந்தனி வெள்ளைசாமி; நாம் எண்ணி பார்க்க முடியாத, கற்பனைக்கும் எட்டாத அவலத்திற்கு, தண்ணீர் தட்டுப்பாடு சென்றிருக்கிறது.இப்படி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அமைச்சரிடம் பதில் இல்லை: ஸ்டாலின்

'தாகத்தில் தமிழகம்' என்ற, 'ஹேஸ்டேக்'கில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின்,தண்ணீர் பிரச்னை தொடர்பாக, தன் கருத்தை, 'டுவிட்' செய்துள்ளார். அதில், 'தண்ணீர் இல்லாமல், பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகின்றன.ஐ.டி., கம்பெனிகள், தங்கள் ஊழியர்களை, இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. இந்த அவல நிலை, சென்னைக்கு வந்தது ஏன்... இதற்கெல்லாம், ஊழலில் நீந்தும், உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் இருந்து, உரிய பதில் இல்லை' என, குறிப்பிட்டுள்ளார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
17-ஜூன்-201910:33:02 IST Report Abuse

நக்கீரன்இவ்வளவு நடந்தும் இந்த ஆட்சியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ரோம் பற்றி எறிந்த போது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. கொள்ளையர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்த இந்த மக்கள் இன்னும் கொஞ்சம் அனுபவிக்கட்டும்

Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
17-ஜூன்-201910:25:42 IST Report Abuse

a natanasabapathyItharkku aatchiyaallarkallai mattum kurai koora mudiyaathu keduketta manitharkallum kaaranam aaru yeri kulam kuttaikalai thoothu veedu katti ullaan Kal moolai illaatha kudimakan kal janathogai yaiyum perukki konde irukkiraan kal padithavan kooda vathavatha venrru kuzhanthaikalai perttu kolkiraan ithil mathaveriyarjalin seyal paadu veru onrukku mel peru athai thadai seyya vum meeri perttu kondaal avarkallukku arasu salukai kal anaithaiyum niruthavum

Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
17-ஜூன்-201909:42:07 IST Report Abuse

Nallappan Kannan Nallappanமோடி கெஞ்சினார் நல்லது செய்யுனும் என்று நீங்க என்னசெய்திங்க இலவசம் மட்டும் போதும் பொது நன்மை ஏதும் வேண்டாம் என்று தொரத்தி விட்டீர் இப்போயென்ன வியாக்கினம்

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X