அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் வரதமாநதி அணை

Added : ஜூன் 17, 2019
Advertisement

பழநி : பழநி-கொடைக்கானல் ரோடு வரதமாநதிஅணையில் ரூ.2கோடி செலவில் விளையாட்டு சாதனங்கள், நீர்வீழ்ச்சிகள் அமைக்க திட்டம் தயார் செய்து, பல ஆண்டுகளாக செயல்படுத்தபடாமல் கிடப்பில் விடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பழநி- - கொடைக்கானல் ரோட்டில் வரதமாநதி அணை உள்ளது. பழநி வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் குடும்பத்தினருடன் பூங்காவிற்கு வந்து பொழுது போக்கி வந்தனர்.பொதுவிடுமுறை மற்றும் சனி,ஞாயிறு நாட்களில், இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது பாதுகாப்பு காரணம் கூறி அணையை பொதுப்பணித்துறையினர் பொதுமக்கள் பார்வையிட தடைவிதித்துள்ளனர். இருப்பினும் சிலர் ஆபத்தானமுறையில் அணையின் சுற்றுச்சுவரைத்தாண்டி உள்ளே செல்கின்றனர். இங்குள்ள பூங்காவில் சிலைகள் உடைந்து கிடக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு சறுக்கு பலகை, ராட்டினம் உட்பட அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளன.கிடப்பில் ரூ.2 கோடிதிட்டம் : சுற்றுலா வளர்ச்சிதுறை நிதியின் கீழ் வரதமாநதி அணையில் ரூ.2 கோடி செலவில் புதிய நீர்வீழ்ச்சிகள், குழந்தைகள் விளையாடும் சறுக்குகள், படகுசவாரி உள்ளிட்டவைகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. வரதமாநதி அணைப்பூங்காவை பராமரித்து புதுப்பிக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X