அரசியல் செய்தி

தமிழ்நாடு

செயல்பாட்டிற்கு வராத கூட்டு குடிநீர் திட்டம்: ரூ.59 கோடியாக உயர்வு

Added : ஜூன் 17, 2019
Advertisement

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சிக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வருவதில் தாமதம் நிலவுவதால் திட்ட மதிப்பீடு 59 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் உசிலம்பட்டி நகராட்சிக்கு வைகை அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் 36 கோடி ரூபாயில் துவக்கப்படும் அப்போதைய எம்.எல்.ஏ., கதிரவன் அறிவித்தார். திட்டத்திற்கான இடத்தேர்வு நடந்தது. பின் அரசியல் காரணங்களால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போதைய எம்.எல்.ஏ., நீதிபதி இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியிருந்தார். அதையடுத்து இத்திட்டம் 48 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயகுமார், 59 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படும்,'' என்றார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராததால் மூன்று முறை மதிப்பீடு உயர்ந்துள்ளது. 58 கிராம கால்வாய் திட்டம் 33.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டு 25 ஆண்டுகள் இழுபறிக்குப்பின் 100 கோடி ரூபாயாக உயர்ந்தது. நகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X