அரசியல் செய்தி

தமிழ்நாடு

மானாவாரி வேளாண்மை இயக்கத்தில் கோடை உழவுக்கு ரூ.500 மானியம்

Added : ஜூன் 17, 2019
Advertisement

மதுரை : மதுரை மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் கோடை உழவு செய்ய ஏக்கருக்கு 500 ரூபாய் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் இந்த இயக்கம் மூன்றாண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. இதில் 2018--19 ஆண்டில் தொடர் நடவடிக்கையாக கல்லுப்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, கள்ளிக்குடி ஆகிய ஒன்றியங்களில் 13 தொகுப்புகளில் தொகுப்புக்கு ஆயிரம் எக்டேர் மானாவாரி நிலப்பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒன்றியங்களில் மக்காச்சோளம் 13 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி விவசாயம் செய்வோருக்கு கோடை உழவு செய்ய மானியமாக ஏக்கருக்கு 500 ரூபாய் வழங்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம், நீர் சேமிக்கும் திறன் அதிகப்படுத்தப்படுகிறது.

கூட்டுப்புழுக்கள் அழிக்கப்பட்டு, பூச்சி நோய் தாக்குதல் குறைகிறது. கடந்தாண்டு மக்காச்சோளப்பயிர்களில் புதிய படைப்புழுக்கள் தாக்குதல் இருந்தது. இது மக்காச் சோளத்தை தவிர இதர பயிர்களையும் தாக்கும் வாய்ப்புள்ளது. கோடை உழவு செய்வதன் மூலம் படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு விதை, உயிர் உரங்கள், டிரைக்கோடெர்மா, விரிடி, சூடோமோனாஸ், நுண்ணுாட்டக்கலவை போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன என வேளாண்மை இணை இயக்குனர் குமாரவடிவேலு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X