ஓ.ராஜா மீது வழக்கு பதிய உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓ.ராஜா மீது வழக்கு பதிய உத்தரவு

Added : ஜூன் 17, 2019
Share
பெரியகுளம்:துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பியும் மதுரை ஆவின் தலைவருமான ராஜா மீது வழக்கு பதிவு செய்ய பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பெரியகுளம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பெரியகுளம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நகர பொது செயலாளர் துரை 40. இவர் பெரியகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் மணல் ரேஷன் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் பொதுப்பணித்துறை வட்ட

பெரியகுளம்:துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பியும் மதுரை ஆவின் தலைவருமான ராஜா மீது வழக்கு பதிவு செய்ய பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பெரியகுளம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரியகுளம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நகர பொது செயலாளர் துரை 40. இவர் பெரியகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் மணல் ரேஷன் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் பொதுப்பணித்துறை வட்ட வழங்கல் அலுவலகம் வடகரை போலீசில் 2018 ல் புகார் செய்தார். 2018 அக். 21ல் துரை மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இது குறித்து துரை பெரியகுளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தன்னை சுரேஷ், சேகர், சசி அடித்ததாகவும் ஓ. ராஜா துணையாக இருந்ததாகவும் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார் ஓ. ராஜா மற்றும் மூன்று பேர் மீது வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X