காங்.,க்கு அடி மேல் அடி; மற்றொரு எம்.எல்.ஏ., தாவல்?

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

ஐதராபாத்: தெலுங்கானாவில், ஏற்கனவே, 12 எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு மாறியுள்ள நிலையில், காங்.,கைச் சேர்ந்த மற்றொரு, எம்.எல்.ஏ.,வும் தாவுவதற்கு தயாராக உள்ளார்.



latest tamil news



தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. 18 காங்., - எம்.எல்.ஏ.,க்களில், 12 பேர் சமீபத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்தனர். அதனால், சட்டசபையின், காங்.,கின் பலம், ஆறாக குறைந்தது. இந்த நிலையில், நால்காண்டோ அருகில் உள்ள, முனுகோடே தொகுதியின், காங்., - எம்.எல்.ஏ.,வான, கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி, கட்சி மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.


latest tamil news




பா.ஜ., மூலமே நாடு வளர்ச்சி:


அவர் கூறியதாவது: மாநிலத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு எதிராக, நான் மட்டுமே பேசி வருகிறேன். அந்தக் கட்சியை எதிர்க்கக் கூடிய தலைமை, இங்கு இல்லை. இதனால், கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். தெலுங்கானாவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் காங்., கட்சி மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. பா.ஜ., மூலமே, நாடு வளர்ச்சியை எட்ட முடியும். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு மாற்றாகவும், பா.ஜ., உள்ளது. நான் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை.

அதே நேரத்தில், காங்.,கில் தொடர முடியாத சூழ்நிலை உள்ளது. பா.ஜ.,வில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. என்னுடைய ஆதரவாளர்களின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-ஜூன்-201917:15:07 IST Report Abuse
Nallavan Nallavan சம்பாதித்துச் சேர்த்தவரை போதும் என்ற எண்ணமே காங்கிரஸ் கட்சியில் தலைமை உட்பட முக்கியப் பிரமுகர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது ...... பீகார் உள்ளிட்ட சில மாநிலத்து தேர்தல்கள் வருவதால் அவற்றையும் பார்த்துக்கொண்டு தலைமையை மாற்றிக்கொள்ளலாம் என்று இருக்கிறார்களோ ??
Rate this:
Cancel
Karun Muruga - banglore,இந்தியா
17-ஜூன்-201915:10:07 IST Report Abuse
Karun Muruga காசுக்கு கண்டதை தின்னும் ஜென்மங்கள் காசுக்கு காட்டி கொடுப்பானுவ.மானம் உள்ள ஜென்மம்
Rate this:
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
17-ஜூன்-201914:14:43 IST Report Abuse
JIVAN இல்லுமினாட்டி ரெப்ரசன்டேட்டிவ் நல்லவன் அவர்களே.. உங்கள் தத்துவம் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே போகும்.. மேற்பகுதி கீழே வரும்... மாற்றம் ஒன்றே மாறாதது.. உங்களுக்கும் உங்க கூட்டத்துக்கும் புரியவில்லை என்பது தானே நிதர்சனம், ஒருவேளை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கிறீர்களோ.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-ஜூன்-201915:45:37 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅது உங்கள் தலைமை கூட்டத்திற்கு சுத்தமாக புரியாததால் தானே 44 , 52 என்று வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். நல்ல மாற்றம் ஒன்றால் மட்டுமே உங்கள் கட்சியை கரையேற்ற முடியும். தலைமை சிறப்பாக இருப்பதால் தான் 353 இடங்களில் NDA வெல்ல முடிந்தது. அது போல், வழிப்போக்கர்களை நம்பாமல் நல்லதொரு தலைவரை, அனுபவசாலியை கட்சிக்கு தலைவராக தேர்த்தேடுத்தால் மட்டுமே உங்கள் கட்சியால் வருங்காலத்தில் பிழைக்க முடியும் என்பதையும் நீங்கள் உணரவேண்டிய தருணமிது. ஜெய் ஹிந்த்....
Rate this:
JIVAN - Cuddalore District,இந்தியா
17-ஜூன்-201916:30:57 IST Report Abuse
JIVANமென்பொருள் வல்லுநர் மற்றும் பாகிஸ்தான் பக்கத்தில் இருக்கும் வரை எங்களை உங்களால் தோற்கடிக்க முடியாது என்று உண்மையை தயிரியதோடு சொல்லுங்கள் அதை விட்டு விட்டு நல்ல தலைமை என்று பொய்யான தகவலை கொடுக்கவேண்டாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X