பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த முடிவு

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட தமிழக அரசு தயாராகி வருகிறது.தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக நீராதாரம் கிடைத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு தென்மேற்கு பருவமழை காலத்திலும் நீர்வரத்து உள்ளது.வடகிழக்கு பருவமழை 2018ல் ஏமாற்றி விட்டதால் பல மாவட்டங்களில் ஆறுகள்

சென்னை: மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட தமிழக அரசு தயாராகி வருகிறது.latest tamil newsதமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக நீராதாரம் கிடைத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு தென்மேற்கு பருவமழை காலத்திலும் நீர்வரத்து உள்ளது.வடகிழக்கு பருவமழை 2018ல் ஏமாற்றி விட்டதால் பல மாவட்டங்களில் ஆறுகள் அணைகள் ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு விட்டன.

தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்துள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2004ல் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது. அதன்பின் இத்திட்டத்தை யாரும் தீவிரப்படுத்தவில்லை.


latest tamil newsதற்போது தொழிற்சாலைகள் அலுவலகங்கள் வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் துார்ந்து கிடக்கின்றன. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை மானியம் வழங்கி செயல்படுத்துவது தொடர்பாக உள்ளாட்சி துறைகளின் உயர் அதிகாரிகளுடன் அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
17-ஜூன்-201915:31:41 IST Report Abuse
Poongavoor Raghupathy Rain water saving is possible only when there is Rain. Now the situation is Rains have failed for last 2 years in Tamilnadu. In Maharashtra the Chief Minister Fadnavis had arranged every day a goods train carrying water and sent to Latur a drought affected area and provided water to around 75 village peoples. This was done continuously daily for around 6 months. Why Edappadi Ministry take a clue from this and help people to get water in most affected areas to start with. If there is a WILL there is a way. We can not expect any useful service from DMK because Stalin knows only to accuse and derive political advantages. Edappadi has to act fast and come out possible ways to provide water to the poor people. This is an opportunity for ADMK to show their real service work to satisfy the people. Edappadi to send Ministers to Mumbai to understand how Maharashtra Govt provided water in crisis situation. Edappadi must forget the criticisms and concentrate to provide water to poor people.
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-ஜூன்-201916:37:16 IST Report Abuse
Loganathan KuttuvaSeveral years before water was brought from Mettur and Vijayavada by train....
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
17-ஜூன்-201914:45:45 IST Report Abuse
svs //.....அதிகமாக மணல் அள்ளுவதால் இயற்கையில் என்ன பாதிப்பு ....//...........பாலாற்றில் மணல் அள்ளி அதை கட்டாந்தரை ஆகி விட்டார்கள் .....இதனால் என்ன பாதிப்பு என்று எந்த விஞ்ஞான துறை வல்லுநர் யாருக்கும் தெரியாது என்கிறார்கள் ..ஏனென்றால் மனித வரலாற்றில் இப்படியொரு கொடுமை இதுவரை நடந்ததில்லை ....இயற்கையை அறிந்தவர் எவரும் இல்லை ......
Rate this:
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
17-ஜூன்-201914:03:46 IST Report Abuse
Idithangi அந்த அம்மா கொண்டுவந்த நல்ல திட்டத்தை சரியாக பின் பற்றாமல் ஏமாற்றி லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கிய பொதுமக்களும் , கட்டிட கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளும் பல்லாண்டு வாழ்க. இலவச டிவி கண்ணை மறைத்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X