மீடியா முன்னிலையில் மட்டுமே பேச்சுவார்த்தை: மம்தாவுக்கு டாக்டர்கள் நிபந்தனை

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள், மீடியா முன்னிலையில் மட்டுமே பேச்சுவாரத்தை நடத்த வேண்டும் என மம்தாவுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் கோல்காட்டாவில் அரசு மருத்துவ கல்லூரியில் உயிரிழந்தவர்களின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள், மீடியா முன்னிலையில் மட்டுமே பேச்சுவாரத்தை நடத்த வேண்டும் என மம்தாவுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.latest tamil newsமேற்கு வங்க மாநிலம் கோல்காட்டாவில் அரசு மருத்துவ கல்லூரியில் உயிரிழந்தவர்களின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களை அம்மாநில முதல்வர் மம்தா, சமாதான பேச்சுவார்த்தை அழைத்தார்.


latest tamil newsஇதற்கு ஒத்துக்கொண்ட டாக்டர்கள், சமாதான பேச்சுவார்த்தை வெளிப்படைத்தன்மையாக நடந்தால், எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வர தயார் என அறிவித்துள்ளனர். மீடியாக்கள் முன்னிலையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று(ஜூன் 17) முதல் நாடு தழுவிய ஸ்டிரைக் நடத்தப்படும் என அனைத்திந்திய டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேற்குவங்க டாக்டர்களுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 300 டாக்டர்கள், பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூன்-201915:50:28 IST Report Abuse
Babu நோயாளிகளின் மருத்துவ கட்டணங்களையும், பயன்படுத்திய மருந்துகளையும் (பிராண்ட் மற்றும் அவசியத் தன்மை), டெஸ்ட்டுகளையும் (அவசியமானதா) பற்றியும் மீடியாவில் வெளியிட்டு, விவாதித்து அப்புறமாக பீஸ் வாங்கிக் கொள்வரா?
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
17-ஜூன்-201915:02:20 IST Report Abuse
Loganathaiyyan மேற்கு வங்காளம் விடுதலை பெரும்?????
Rate this:
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
17-ஜூன்-201914:02:27 IST Report Abuse
Tamilachi மம்தாவுக்கு ரோஹியங்கியாஸ் முஸ்லிம்களால் எப்பேர்ப்பட்ட தீராத தலைவலிகள் வரப்போகின்றன என்பதற்கு இது ஆரம்ப புள்ளிதான்...இனிமேல்தான் அவர்களால் மேற்கு வங்கம் இரண்டாவது காஷ்மீராக மாறப்போகிறது...அதற்க்கு முன்பே மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, மேற்கு வங்கத்தில் உள்ளவர்களின் குடியுரிமையை முறைப்படுத்தி, ரொஹிங்கியாஸ் முஸ்லிமகளை இந்தனை விட்டே வெளியேற்றினாதான் மக்கள் பாதுகாப்பு பெறுவார்...மேலும் மமதையின் அரசை களைத்து இவருக்கும் முடிவு கட்ட வேண்டும்..
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-ஜூன்-201916:40:14 IST Report Abuse
Darmavanஇதன் விவரம் என்ன விளக்க முடியுமா...
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-ஜூன்-201916:42:43 IST Report Abuse
Darmavanரோஹங்கஸ் சொந்த நாட்டிலிருந்தே விரட்டப்பட்ட பயங்கரவாதிகள் இவர்களை விரட்ட வேண்டும். இதற்கு மூர்க்க ஆதரவாளர்கள் ஆதரவு. இவர்களும் தண்டிக்கப்படவேண்டும்.கோர்ட் இதற்கு ஒரு முட்டுக்கட்டை....
Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
17-ஜூன்-201917:22:30 IST Report Abuse
Tamilachiகடந்த வருடம் ராஜ்நாத் சிங் இதற்க்காகத்தான் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மற்றும் முறைப்படுத்துதல் சம்பந்தமாக செய்தி வெளியிட்டதும் இந்த மமதை உடனே சிலிர்த்துக்கொண்டு உறுமினார்...எல்லாம் இந்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்து தான், இதில் பிரதமர் கனவு வேறு அவ்வப்போது வந்து இந்த ஆணவம் பிடித்த அரசியல் வியாதியை மதம் பிடிக்க வைத்தது விட்டது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X