பலவீனமானது, 'வாயு' புயல்; குஜராத்தில் இன்று கடக்கிறது

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019
Advertisement

ஆமதாபாத்: பலவீனமடைந்துள்ள, 'வாயு' புயல், குறைந்த காற்றழுத்தமாக மாறி, குஜராத் கடற்கரையை இன்று(ஜூன் 17) கடக்கிறது.






தென் மேற்கு பருவமழை, கடந்த, 6ம் தேதி துவங்கியது. இதையடுத்து, அரபிக்கடலில், குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது, புயலாக மாறியது. இதற்கு, 'வாயு' என, பெயரிடப்பட்டது. இந்த புயல், குஜராத்தின் போர்பந்தர் கடற்கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், வாயு புயல் திசை மாறியது. 'பெரிய பாதிப்பின்றி கடந்து செல்லும்' என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் திசை மாறி, குஜராத்தை நோக்கி மீண்டும் திரும்பியது. ஆனால், வலுவிழக்க துவங்கியது.





இந்நிலையில், 'பலவீனமடைந்த வாயு புயல், காற்றழுத்த தாழ்வாக மாறி, குஜராத் கடற்கரையை இன்று இரவு கடக்கும். இதனால், வடக்கு குஜராத், சவுராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில், பலத்த மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 'ஆந்திராவில், வரும், 18ம் தேதியும், தெலுங்கானாவில், 20ம் தேதியும் பருவமழை துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X