பொது செய்தி

தமிழ்நாடு

சினிபிட்ஸ்1 - 16.6.2019

Added : ஜூன் 17, 2019
Advertisement

30 ஆண்டுகளாக வாழைப்பழம் என்னாச்சுகங்கை அமரன் இயக்க, இளையராஜா இசையில், ராமராஜன் - கனகா நடித்த கரகாட்டக்காரன் வெளியாகி, நேற்றோடு, 30 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது குறித்து, கங்கை அமரன் டுவிட்டரில் கூறுகையில், ''ஜூன் 16, அகில உலக சூப்பர் படமான கரகாட்டக்காரன் வெளிவந்து, 30ம் ஆண்டு. நன்றியுடன் உங்கள் நான்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்து கூறிய நிலையில், ரசிகர் ஒருவர், '30 ஆண்டுகளாச்சு, இன்னும் அந்த இரண்டாவது வாழைப்பழம் என்னாச்சுன்னு தான் தெரியலண்ணே' என, கிண்டலாக கூறியுள்ளார்.
---ஆரம்பமே இப்படியா!ஷெரின் காஞ்ச்வாலா நடித்து ஒரு படம் தான் வெளியாகி உள்ளது. அம்மணி இதற்குள் பல, 'போட்டோ ஷூட்'களை நடத்தி விட்டார். சமீபத்தில் மேலாடையின்றி இவர் நடத்திய போட்டோ ஷூட், தென்னிந்திய திரையுலக நடிகையர் இடையே, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரை நிர்வாணமாக இருந்தாலும், அதை ஆபாசம் இல்லாமல் படமாக்கிய நடிகைக்கு, வாழ்த்தும் சிலர் கூறியுள்ளனர்.-------கேங்ஸ்டராக சிம்புசிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை, சமீபத்தில், மிகவும் எளிமையாக நடத்தினர். ஸ்டூடியோ கிரின் தயாரிக்கும் இப்படத்தை, நார்த்தன் இயக்குகிறார். இப்படம், கன்னடத்தில் வெளியான முப்டி படத்தின் ரீமேக் ஆகும். சிம்பு, கேங்ஸ்டர் தலைவனாக நடிக்க, கவுதம் கார்த்திக் போலீசாக நடிக்கிறார்.

படத்திற்கு மதன் கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.----------நட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாசிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை, பாண்டிராஜ் இயக்குகிறார். குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படத்தில், 'நட்டி' நட்ராஜ் ஜோடியாகவும், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சிவாவுக்கு ஜோடியாக அனுஇம்மானுவேல் நடிக்கிறார். இப்படத்தில் யோகிபாபு, சூரி, பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ் என, ஏராளமான நட்சத்திர பட்டாளம் உள்ளது.--------தள்ளிப்போன, 'கொரில்லா'ஜீவா, ஷாலினிபாண்டே, யோகிபாபு, சதீஷ், ராதாரவி ஆகியோருடன் சிம்பன்சி நடித்த கொரில்லா படம், இந்த மாதம், 21ம் தேதி வெளியாவதாக இருந்தது. இதே தினத்தில், விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்த சிந்துபாத் படம் வெளியாவதால், கொரில்லா படத்தை அடுத்த மாதம், 5ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். கொரில்லா படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X