பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் இன்று சிகிச்சை கிடைக்குமா?

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (17)
Advertisement

சென்னை: மேற்கு வங்கத்தில், டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும், இந்திய மருத்துவ சங்கம், இன்று(ஜூன் 17), நாடு தழுவிய, 'ஸ்டிரைக்' அறிவித்துள்ளது. தமிழகத்திலும், டாக்டர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்பதால், அரசு மருத்துவமனைகளில், மருத்துவ சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.






மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்களால், இரண்டு பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து, அந்த மாநிலத்தில் உள்ள டாக்டர்கள், ஸ்டிரைக்கில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 'டாக்டர்கள், ஸ்டிரைக்கை கைவிட்டு பணியில் சேராவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர், மம்தா எச்சரித்தார். இது, டாக்டர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. அவர்களுக்கு ஆதரவாக, பல மாநிலங்களை சேர்ந்த டாக்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.





இந்நிலையில், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், இன்று, ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக, இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள, டாக்டர்கள் சங்கங்களும் இன்று, ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன. இதனால், அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.





இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழக பிரிவு மாநில தலைவர், கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி, இன்று காலை, 6:00 மணி முதல், நாளை காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம், தமிழகம் முழுவதும், போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தொடரும்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூன்-201913:38:52 IST Report Abuse
Ram RV அதென்ன இராசாசி மருத்துவமனை? ஜெயலலிதாவை செயலலிதா என்றோ ஸ்டாலினை சுடாலின் என்றோ யாரும் எழுதுவதில்லை. ராஜாஜி மட்டும் என்ன குற்றம் செய்தார்?
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
17-ஜூன்-201913:02:17 IST Report Abuse
raghavan என்ன ஸ்டரைக்கு சொந்தமாக நடத்தும் கிளினிக்கில் பணம் பிடுங்கி வைத்தியம் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel
17-ஜூன்-201911:53:01 IST Report Abuse
Sridhar Sambandham எத்தனை பேருக்கு தவறான சிகிச்சை அளித்து பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் அவர்களது நிலைமை பற்றி இந்த போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் சிந்திக்க வேண்டும்
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
17-ஜூன்-201913:05:07 IST Report Abuse
parthaமருத்துவர்களின் தரம் குறைய காரணம் DILUTION OF MEDICAL EDUCATION STANDARDS என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள் NEET வேண்டாம் என்று சொல்லும் அரசியல் வியாதிகளை புறக்கணியுங்கள் படிப்பதே ஒரு சுமை என்ற ஒரு பீதியை கிளப்பும் அரசியல்வாதிகள் ஒழிந்தால் எல்லா படிப்புகளும் தரமாகும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X