"எதிர்கட்சியை மதிப்போம்" மோடியின் தன்னடக்க பேச்சு

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி: குறைந்த அளவில் எதிர்கட்சியினர் இருந்தாலும் அவர்களின் உணர்வை மதிப்போம். வலுவான எதிர்கட்சி ஆரோக்கிய ஜனநாயகத்திற்கு அவசியம் என பார்லி., முதல் கூட்டத்திற்கு இன்று வந்த பிரதமர் மோடி பார்லி.,வளாகத்தில் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.








ஏழைகளின் எதிர்பார்ப்பு



இந்த லோக்சபா சுமூகமாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவைக்கு வரும் புதிய நண்பர்களை வரவேற்கிறேன். அவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவுகளையும், உணர்வையும் நான் அறிவேன். புதிய உறுப்பினர்கள், புதிய கனவுகளை இந்த லோக்சபாவில் காண்கிறோம். சுதந்திர இந்தியாவில் அதிகம் பெண்கள் உறுப்பினர்கள் தற்போது வந்துள்ளனர். ஏழைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஏழைகள் தேவையை நிறைவேற்றுவதே எங்களின் நோக்கம். மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் அவர்களின் வளர்ச்சிக்காக உழைக்கவுள்ளோம்.






வலுவான எதிர்கட்சி


மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும். எதிர்கட்சியினர் பார்லி., நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்கட்சி மிகவும் முக்கியமானது. அதன் மதிப்பை நாங்கள் அறிவோம். வலுவான எதிர்கட்சி ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம். குறைவான எண்ணிக்கையில் எதிர்கட்சியினர் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர்களின் உணர்வை மதிப்போம். இவ்வாறு மோடி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
18-ஜூன்-201913:46:32 IST Report Abuse
KumariKrishnan Bjp தமிழ்நாட்டில் எவனுக்கும் மோடியைப்பற்றி கருத்துச்சொல்ல உரிமை இல்லை
Rate this:
Share this comment
Cancel
18-ஜூன்-201900:06:06 IST Report Abuse
ஆப்பு முதல்ல நீங்க குடுத்த தேர்தல் வாக்குறுதியை மதியுங்க...15 லட்சம், 2 கோடி பேருக்கு வேலை, நூறு நாள்ள கருப்பு பணம் இதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்ளுங்க...
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
17-ஜூன்-201920:03:14 IST Report Abuse
Kannan காங்கிரஸ் கட்சியை நம்புவது பாம்புக்கு பால் வார்த்தது போலாகும். பிரதமர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X