பாக்.,க்கு மீண்டும் அடி : இந்திய அணியை வாழ்த்திய அமித்ஷா

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (52)
Advertisement

புதுடில்லி : பாக்.,க்கு மீண்டும் அடி கொடுத்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.






இங்கிலாந்தில் நடந்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று (ஜூன் 16) நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை பாக்., இதுவரை வென்றது இல்லை என்ற பெருமை தக்கவைக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணிக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரன் ரிஜிஜூ, பியுஷ் கோயல் உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





இதில் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2016 ம் ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும், நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட்டு வாழ்த்து பதிவிட்டிருந்தார். அவர் தனது பதிவில், பாக்., மீது இந்திய அணி மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு தாக்குதலிலும் முடிவு ஒன்று தான். சிறப்பாக விளையாடிய ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு இந்தியனும் பெருமையாக உணர்வதுடன், இந்த அபார வெற்றியை கொண்டாடி வருகிறான் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-201900:03:45 IST Report Abuse
ஆப்பு கிரிக்கெட் வெற்றி தோல்வியை வெச்சு அரசியல் செய்யும் இவிங்களை என்ன செய்யலாம்? போங்க போய் மக்களுக்கு நல்லது செய்யப் பழகுங்க...
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-ஜூன்-201920:39:23 IST Report Abuse
Krishnamurthy Venkatesan விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். சர்வதேச விளையாட்டுகளினால் நாடுகளுக்கு இடையே சகோதரத்துவம், ஒற்றுமை, விட்டுக்கொடுத்து போதல் போன்றவை அதிகரிக்க வேண்டுமே ஒழிய காழ்ப்புணர்ச்சி கூடாது. ஒருவேளை இந்தியா தோற்று போயிருந்தால்?
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201920:13:56 IST Report Abuse
sankar இந்த வெற்றியை கொண்டாட வேண்டியதில்ல அதுவும் சுர்ஜிக்கல் ஸ்ட்ரிக்குடன் ஒப்பிட வேண்டாம் . அமித் ஷா அப்படி பேசி இருந்தால் தவறு தான் . விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் வாசிம் அக்ரம் காலத்தில் நாம் தோற்கவில்லையா . பொதுவா விளையாட்டு வெற்றியை வெற்றி என்ற அளவில் மட்டும் கொண்டாடலாம் . பாகிஸ்தான் ஒரு இதுபோன்ற அணி ஏற்கனவே ரெண்டு தோல்வியை பதிவு செய்துள்ள அணி . அதை வெற்றி கொண்டதை பெருமை பேச வேண்டியதில்லை இன்னும் நாலு மேட்ச் இருக்கு செமி பைனல் பைனல் எல்லாம் இருக்கு அமைதியா இருங்க கப் ஜெயித்த பின் கொண்டாடலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X