பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை: ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
எழும்பூர் : சென்னை ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் சந்தோஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை அருகே, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவரை, அவரை காதலித்து வந்ததாக சொல்லப்படும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை
சென்னை, ரயில் நிலையங்கள், சிசிடிவி, ஒரு வாரத்தில்

எழும்பூர் : சென்னை ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் சந்தோஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவரை, அவரை காதலித்து வந்ததாக சொல்லப்படும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது, இந்த சம்பவத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் சந்தோஷ் சந்திரன் பல்வேறு ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ''சென்னை கோடம்பாக்கம், மாம்பலம், சேத்துப்பட்டு, பரங்கிமலை, வில்லிவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்னும் ஒரு வாரத்தில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 5 சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும் '' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
17-ஜூன்-201919:25:09 IST Report Abuse
Natarajan Ramasamy ஸ்வாதி கொலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 24 ஜூன் 2016 நடந்தது.அப்போது அங்கு CCTV காமெரா இல்லை. போலீஸ் இல்லை. தமிழகமே ஆர்ப்பரித்து எழுந்தது. மூன்று வருடம் ஆகியும் அதே கதி. இன்னொரு கொலை முயற்ச்சி - அதே ஒருதலை தறுதலை காதல். CCTV போலீஸ் ஒவ்வொரு ஸ்டேஷனில் வருவதற்கு இன்னும் எதனை துயர சம்பவம் வேண்டும்??? ரௌடியாய் எனகொண்டெரில் கொலை செய்ததை பற்றி தானே முன்வந்து மனித உரிமை போலீசுக்கு கேள்வி கேட்கிறது. ஆனால் CCTV உம போலீஸ் பீட்டும் ரயில்நிலையங்களில் வேண்டும் என்று கேட்டதா? ஒரு வாரம் கழித்து cctv பொருத்தப்பட்டது என்று யார் கேட்பார்கள்? தினமலர் கேட்டு பிரசுரிக்குமா? சில ரயில்வே நிலையங்கள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற ரயில்வே நிலையங்களிலும் மக்கள் தான் பயணத்திற்க்காக வருகிறார் கல். அவர்களின் பாதுகாப்பு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X