ரவுடி என்கவுன்டர் : மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி என்கவுன்டர் : மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ்

Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (8)
Share
மனித உரிமை, ரவுடி, நோட்டீஸ்

சென்னை : சென்னை, மாதவரத்தில் ரவுடி வல்லரசு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த ஜூன் 15 அன்று, சென்னை மாதவரம் அருகே ரவுடி வல்லரசுவை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், அவன் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சித்ததால், போலீசார் தற்காப்பிற்காக அவனை சுட்டுக்கொன்றனர்.
இந்த ரவுடி என்கவுன்டர் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமே முன் வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து 8 வாரத்தில் பதிலளிக்க போலீஸ் டிஜிபிக்கும், 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கும் மனித உரிமை ஆணையத் தலைவர் மீனாகுமாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X