சென்னை: பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது முதல் இதுவரை தடையை மீறியவர் களிடமிருந்து அபராதத் தொகையாக மட்டும் ஒரே நாளில் 1.58 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. நாளை (ஜூன் 18) முதல் அபராதம் விதிக்கும் முறை அமலாகிறது.
அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், '' கடந்த ஜனரி 1, 2019 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது. மாற்றுப் பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 820.50 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இனிமேல், 3 முறை அபராதம் விதிக்கப்பட்டும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் எவ்வளவு? :
பெரு நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால், முதல் முறை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை 50 ஆயிரமும், மூன்றாவது முறை ஒரு லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றிற்கு, முதல்முறை 10ஆயிரம், 2வது முறை 20 ஆயிரம் மூன்றாவது முறை 25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.நடுத்தர வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு முதல் முறை ஆயிரம் ரூபாயும், 2வது முறை 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது முறை 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த நிறுவனங்கள் மூன்று முறை அபராதம் விதித்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் வணி உரிமம் ரத்து போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த அபராத விதிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகள் நாளை முதல் அமலுக்கு வருவதாக, அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE