சென்னை மெட்ரோவில் தண்ணீர் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மெட்ரோவில் தண்ணீர் இல்லை

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (3)
Share
சென்னை ; மெட்ரோ ரயில் நிலையங்களில் போதுமான தண்ணீர் இல்லாததால் கழிப்பறைகளை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. தண்ணீர் பறறாக்குறை காரணமாக, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் இன்று, கழிவறைகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவ
மெட்ரோ, சென்னை, பரங்கி மலை, தண்ணீர் இல்லை, கழிவறை

சென்னை ; மெட்ரோ ரயில் நிலையங்களில் போதுமான தண்ணீர் இல்லாததால் கழிப்பறைகளை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

தண்ணீர் பறறாக்குறை காரணமாக, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் இன்று, கழிவறைகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி, பச்சையப்பா கல்லுாரி, ஷெனாய் நகர், அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல், ஆலந்துார் மற்றும் பரங்கி மலை என்று மொத்தம் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.

இவற்றில் சீரான குடிநீர் விநியோகம் அவ்வப்போது தடைபடுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, ரயில் நிலைய கேன்டீன்கள், குடிநீர் டாங்குகள், பைப்புகளிலும் போதுமான தண்ணீர் இன்றி சிரமம் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் தண்ணீரின்றி தங்கும் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. ஹோட்டல்கள் பலவும் மூடப்படுகின்றன. ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் எழுந்துள்ள தண்ணீர் பிரச்னை மக்களை கவலையடைய செய்துள்ளது

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X