மதுரை : அரசு மருத்துவ மனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனை உள் கட்டமைப்புகள், வசதிகள் குறித்து, மதுரை நீதிமன்ற கிளைக்கு உள்ளிட்ட 13 மாவட்டங்களில், ஏதேனும் 2 மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு திடீரென சென்று ஜெனரேட்டர், செயற்கை சுவாசங்கள் போன்றவை செயல்பாட்டில் உள்ளனவா என்பதை கண்டறியவேண்டும். இதுகுறித்த ஆய்வறிக்கையை வரும் ஜூலை 23 க்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், சமீபத்தில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதால் 5 பேர் உயிரிழந்தனர். இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தான் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளன.