மே.வங்க டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்| Dinamalar

மே.வங்க டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (9)
Share

கோல்கட்டா ; மேற்கு வங்க மாநிலத்தில் பாதுகாப்பு கோரி கடந்த ஒருவார காலமாக நடந்துவந்த டாக்டர்கள் ஸ்டிரைக், முதல்வர் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.



latest tamil news




தாக்குதல் :


மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா மருத்துவமனை ஒன்றில், நோயாளியின் உறவினர் தாக்கியதில் டாக்டர் ஒருவர் படுகாயமடைந்தார். அதனை கண்டித்து பணியிடத்தில் பாதுகாப்பு கோரி டாக்டர்கள் மேற்குவங்கத்தில் போராட்டத்தில் இறங்கினர். அவர்களிடம் பேசச்சென்ற மம்தா, 4 மணி நேர கெடு விதித்து எச்சரித்தார்.


ஸ்டிரைக் :


இதனால் டில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மும்பை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள டாக்டர்களும் கோல்கட்டா டாக்டர்களை ஆதரித்து களத்தில் இறங்கினர். நீதிவேண்டும், பாதுகாப்பு வேண்டும் என்ற முழக்கத்தோடு போராட்டங்கள் ஒருவார காலம் தொடர்ந்தது. இந்திய மருத்துவர் சங்கமும் இன்று இந்திய முழுவதும் டாக்டர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆதரவு போராட்டங்கள் நடந்தன.


latest tamil news




மம்தா பேச்சு :


இந்த நிலையில், போராடும் டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், மீடியாக்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று டாக்டர்களின் போராட்டக்குழு நிபந்தனை விதித்தனர்.

இதனை மம்தா ஏற்றுக்கொண்டதால், இன்று (ஜூன் 17) மாலை டாக்டர்களின் பிரதிநிதிகள் குழு மம்தாவுன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், டாக்டர்களின் பாதுகாப்பிற்கென மாநில அளவிலான கமிட்டி ஒன்றை அமைப்பது, பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டது.


ஸ்டிரைக் வாபஸ் :


இதனை அடுத்து டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழு அறிவித்தது. மேற்குவங்க டாக்டர்களின் போராட்டத்தை ஆதரித்து இன்று நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X