புதுடில்லி:பீகாரில் மூளைக்காய்ச்சலால் சிறுவர்கள் உயிரிழப்பு 100 என அதிகரித்துள்ளதையடுத்து மத்திய மற்றும் பீகார் அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் சிறுவர்கள், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழப்பு தொடர்ந்தது. ஆய்வில் மூளைக்காய்ச்சல் நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. பலி எண்ணிக்கை 100 ஐ தொட்டது. 290 பேருக்கு மேல் சிகிச்சையில் உள்ளனர். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பார்வையிட்டார். பாதிப்பு அதிகரிப்பதால் ஜூன் 22 வரை பள்ளிகள் மூடப்பட்டது.
மழை இல்லாதபோது கடும் வெயிலில் மூளைக்காய்ச்சல் நோய் பரவுவது மருத்துவத்துறையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மூளைக்காய்ச்சல் உயிரிழப்பு ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் வெயிலால் உயிரிழப்பும் பீகாரில் நடக்கிறது.
இந்நிலையில் மூளைக்காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து மத்திய மற்றும் பீகார் அரசுகளிடம் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE