புதிதாக 213 சிவில் நீதிபதிகள் பதவி ஏற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக 213 சிவில் நீதிபதிகள் பதவி ஏற்பு

Added : ஜூன் 17, 2019
சிவில் நீதிபதிகள், 213 பேர் தேர்வு, பதவிப் பிரமாணம், மணிக்குமார்

சென்னை : தமிழகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 சிவில் நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஊடக விசாரணைகளின் தாக்கத்துக்கு ஆளாகாத வகையில் செயல்பட வேண்டும் என புதிதாக பதவியேற்ற சிவில் நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி அறிவுறுத்தினார்.

அவர்களுக்கான பயிற்சி முகாமையும் துவங்கி வைத்தார். பின்னர் பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, வழக்குகளை ஆர்வத்துடன் விசாரித்து, அறிவுப்பூர்வமாக செயல்பட்டு, பாரபட்சமின்றி முடிவெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிமன்றம் தவிர்த்து வேறு எங்கும் நீதிபதி என நினைக்காதீர்கள் என்றும், நல்ல நீதிபதிகள் என்று பெயர் வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X