பா.ஜ. செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
பா.ஜ. செயல், தலைவர், ஜெ.பி. நட்டா, தேர்வு

புதுடில்லி: பா.ஜ. செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது. பிரதமராக மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தற்போது பா.ஜ. தேசிய தலைவராக உள்ள அமித்ஷா , மத்திய உள்துறை அமைச்சராக பொறு்ப்பேற்றுள்ளார்.


latest tamil news




இந்த வருட ஆரம்பித்திலேயே அமித்ஷா தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. எனினும், லோக்சபா தேர்தலை முன்னிட்டு அவரையே தலைவர் பதவியில் தொடர பா.ஜ., கேட்டுக்கொண்டது
இந்நிலையில் மோடி தலைமையில் பா.ஜ. ஆட்சிமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில் பா.ஜ. செயல் தலைவராக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.அமித்ஷா பா..ஜ. தேசிய தலைவராக வரும் டிசம்பர் வரை தொடர்வார் எனவும் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




நட்டா வாழ்க்கை குறிப்பு



பா.ஜ., வின் முதல் செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா 58, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1960 டிச., 2ல் பீஹாரின் பாட்னாவில் பிறந்தார். பி.ஏ., மற்றும் சட்டம் படித்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயணின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். கல்லுாரியில் படித்த போது, பா.ஜ. ,மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., யில் இருந்தார். 1987 லோக்சபா தேர்தலுக்கு ஹிமாச்சல் மாநில இளைஞர் பா.ஜ., பொறுப்பாளராக இருந்தார். 1993, 1998 மற்றும் 2007 என மூன்று முறை ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

ஹிமாச்சல் மாநில பா.ஜ., தலைவர் மற்றும் பொதுச்செயலராக இருந்துள்ளார். 2012ல் ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார். 2014ல் மோடி அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை அமைச்சராக பணியாற்றினார். 2018ல் மீண்டும் ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார். 2019 லோக்சபா தேர்தலில் உ.பி., மாநில பா.ஜ., பொறுப்பாளராக பணியாற்றிய இவர், 62 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற உதவினார். அமெரிக்கா, கத்தார், ஆஸ்திரேலியா, கனடா, கோஸ்டாரிகா, கிரீஸ், பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூன்-201920:55:22 IST Report Abuse
ராம்குமர் வாழ்த்துகள். தமிழகத்தில் நல்ல செயல் தலைவரை நியமித்து நன்றாக செயல் பட வாழ்த்துகள்
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
17-ஜூன்-201921:06:39 IST Report Abuse
Sathya Dhara தமிழகத்தில் உள்ள திராவிட சக்திகளை ஒழித்து தேசீய சக்தி நிலைக்க ஏதாவது உடனடியாக தடாலடியாக செய்யுங்கள். ஆலயங்களின் நிர்வாகம் அரசிடம் இருந்து மக்களிடம் ....ஹிந்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று துவங்குங்கள். நல்ல வரவேற்பு இருக்கும்....
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
17-ஜூன்-201920:41:53 IST Report Abuse
Rajan வாழ்த்துக்கள். இஙக கருணா, சூசை, உடையாநிதி, கனிய்யாக்கா பையன் அப்படியே ஓடிடும் சார், காவிகள் வேஸ்ட் தானும் சாப்பிடமாட்டான், அடுத்தவனையும் சாப்பிட உட மாட்டான்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூன்-201920:22:38 IST Report Abuse
Janarthanan குடும்ப கட்சிகளில் இந்த மாதிரி கட்சி தொண்டன் யாரவது இந்த மாதிரி தலைவராக முடியுமா ??? குடும்ப கட்சியில் தனக்கு தானே ராஜினாமா கொடுத்து கொண்டு தனக்கு தானே அதை தள்ளுபடி செய்து கொள்ளும் நிலைமை தானே நிலவுகிறது ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X