பதிவு செய்த நாள் :
பணிந்தார் மம்தா; போராட்டம் வாபஸ்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், கடந்த, ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு டாக்டர்களுடன், முதல்வர், மம்தா பானர்ஜி, நேற்று பேச்சு நடத்தினார். 'ஊடகங்களுடன் தான் பேச்சுக்கு வர முடியும்' என்ற டாக்டர்களின் நிபந்தனையை ஏற்றார். இதையடுத்து, போராட்டத்தை டாக்டர்கள் நேற்று முடித்துக் கொண்டனர்.

பணிந்தார்,மம்தா,போராட்டம்,வாபஸ்,Mamata Banerjee


கடந்த சனிக்கிழமை, கோல்கட்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 75 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். கோபடைந்த அவரின் உறவினர்கள், டாக்டர்களை கடுமையாக தாக்கினர்; இரண்டு டாக்டர்கள் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிபந்தனை


இதை கண்டித்து, கடந்த ஞாயிறு முதல், பணிகளை புறக்கணித்த டாக்டர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கோரினர். அவர்களுடன் பேச்சு நடத்த, முன்வராத மம்தா பானர்ஜி, மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். இதனால், நாடு முழுதும் டாக்டர்கள் போராட்டத்தில்

குதித்தனர். விவகாரம் விஸ்வரூபம் ஆனதை அடுத்து, நேற்று பகல், 3:00 மணிக்கு, டாக்டர்களுடன் பேச தயார் என, மம்தா அறிவித்தார். ஆனால், ஊடகங்கள் இல்லாமல், டாக்டர்கள் மட்டும், பேச்சுக்கு வர வேண்டும் என, நிபந்தனை விதித்தார்.

அதை ஏற்க, டாக்டர்கள் மறுத்து விட்டனர். ஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சு நடத்துவோம் என, உறுதியாக அறிவித்தனர். இதனால், வேறு வழியின்றி, இரண்டு, 'டிவி' சேனல்களை மட்டும், மம்தா அனுமதித்தார்.

மக்கள் அவதி


கோல்கட்டாவில் நடந்த பேச்சில், டாக்டர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக, நோயாளிகளின் உறவினர்களின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க, ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அவற்றை பொறுமையாக கேட்ட மம்தா, டாக்டர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க உயரதிகாரிகள் குழுக்களை ஏற்படுத்துமாறும், போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், டாக்டர்களை தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை

Advertisement

கைவிட்டு, பணிக்கு திரும்புவது என, டாக்டர்கள் முடிவு செய்தனர்.அரசு டாக்டர்களின், 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தால், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவ சேவை கிடைக்காமல், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

டில்லியிலும் தாக்குதல்


டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, அவசர கால சிகிச்சை பிரிவில் இருந்த, ஜூனியர் டாக்டர் ஒருவர் மீது, நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர்.நோயாளி ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வலியுறுத்திய உறவினர்கள், டாக்டர்களை தாக்கியதில், டாக்டர் ஒருவர் லேசான காயம் அடைந்தார்.இதை அறிந்த, டில்லி அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், தங்கள் போராட்டத்தை நேற்று மேலும் தீவிரப்படுத்தினர். இதனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர கால சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
18-ஜூன்-201922:28:13 IST Report Abuse

K.   Shanmugasundararajமகன் செத்தாலும் மருமகள் தனது மாங்கல்யத்தை இழக்க வேண்டும் என்ற குறிக்கோள். அது போன்று மக்கள் கஷ்டப்பட்டாலும் மருத்துவர்கள் போராட்டம் நடக்க வேண்டும். அதற்கு காவி கட்சி பின்னால் இருந்து ஆதரவு. எந்த வேலை நிறுத்தம் என்றாலும் அது சரியா , தவறா என்று பாராது , " தடை போடும் " நீதிமன்றம் இந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை எதுவும் போடவில்லை. காரணம் ?.

Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
18-ஜூன்-201916:08:52 IST Report Abuse

Bhagat Singh Dasanயோக்கிய சிகாமணிகள் இல்லை

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஜூன்-201916:04:46 IST Report Abuse

Endrum Indianகுற்றம் நடந்தது என்ன??? மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முகமது ஷாகித் (வயது 77) என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் கடந்த 10ந்தேதி அவர் உயிரிழந்து விட்டார். இதற்கு மருத்துவர்களின் கவன குறைவே காரணம் என கூறி அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 2 மருத்துவர்கள் காயமடைந்தனர். கேள்விகள் 2 1) வயது 77 , மரணம் 2) முஸ்லீம் . இதில் உள்ள ஒரே காரணம் அவன் முஸ்லீம் என்பதால் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது , ஏன் என்றால் அது முஸ்லீம் பேகம் மும்தாஜ் ஆளும் மாநிலம்???அப்படித்தானே??? இவ்வளவு கேவலமான அரசாட்சி முறை உலக வரலாற்றில் முதல் முறை.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X