பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜூன் 18, 1908கக்கன்: மதுரை மாவட்டம், மேலுார் வட்டத்தில் உள்ள, தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர், கக்கன். மாணவப் பருவத்திலேயே, காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்; சிறை வாசம் அனுபவித்தார்.சுதந்திரத்திற்குப் பின், 1952ல் நடந்த, முதல் லோக்சபா தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். 1954ல், தமிழக காங்., தலைவராக
 இதே நாளில் அன்று

ஜூன் 18, 1908கக்கன்:
மதுரை மாவட்டம், மேலுார் வட்டத்தில் உள்ள, தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர், கக்கன். மாணவப் பருவத்திலேயே, காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்; சிறை வாசம் அனுபவித்தார்.சுதந்திரத்திற்குப் பின், 1952ல் நடந்த, முதல் லோக்சபா தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். 1954ல், தமிழக காங்., தலைவராக பொறுப்பேற்றார். 1957ல், மேலுார் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, பொதுப்பணி, மின்சாரம், தாழ்த்தப்பட்டோர் நலம், விவசாயம் மற்றும் மாநில உள்துறை என, பல்வேறு துறைகளின் அமைச்சராக, திறம்பட செயலாற்றினார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் தான், மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. இரண்டு, விவசாயப் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டன. வறுமையும், எளிமையுமாக வாழ்ந்த கக்கன், உடல் நலக்குறைவால், சென்னை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, 1981 டிச., 23ம் தேதி காலமானார்.'எளிமையின் சின்னம்' கக்கன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
18-ஜூன்-201906:30:40 IST Report Abuse
natarajan s மேட்டூர் 1924 இல் கட்டப்பட்டதாக படித்திருக்கிறேன். மதுரை விவசாய கல்லூரி 1966 இல் ஆரம்பிக்க பட்டது . அப்போது இவர் அமைச்சர் இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X