ஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா?

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (17)
Advertisement

புதுடில்லி : பிரதமர் நரேந்திரமோடி, வரும் ஜூன் 19, புதனன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில், விவாதிக்கப்பட உள்ள 'ஒரே நாடு ; ஒரே தேர்தல்' பற்றித்தான். இது சாத்தியமா என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது.லோக்சபா பலம் :


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 354 இடங்களை வென்றுள்ளது. பா.ஜ., தனித்தே 303 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே, எந்த ஒரு மசோதாவையும் லோக்சபாவில் நிறைவேற்ற பா.ஜ.,வால் முடியும்.


ராஜ்யசபா 102 தான் :


ஆனால், ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 254 இடங்களில் பா.ஜ.,விற்கு வெறும் 102 பேர் தான் உள்ளனர். எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சியினரின் ஆதரவு தேவை. எனவே தான், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மோடியின் முக்கியான அஜண்டாவாக இருந்தாலும், கருத்தொற்றுமை ஏற்படுத்தவே பா.ஜ., முயன்று வருகிறது.முதல் 3 தேர்தல்கள் :


அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வல்லுநர்களிடையே இதன் சாதக பாதக அம்சங்கள் அலசப்பட்டு வருகின்றன. முதலில், வரலாற்று ரீதியில் இது நாட்டிற்கு புதிதல்ல. நாட்டின் முதல் தேர்தலான 1952 லேயே நாடுமுழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தான் நடந்தன.

அதன்பின்னர், 1957, 1962 என்று மூன்று தேர்தல்களும் அப்படித்தான் நடந்தன. பின்னர்தான் மாறியது. பிரதமர் மோடி அதனை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கருதுகிறார். ஏனெனில், நாடு பெரும்பாலான மாதங்களை தேர்தல்களிலே செலவிட்டால், வளர்ச்சிப்பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது என்பதே.


அடிக்கடி தேர்தல்கள் :


கடந்த 17 வது லோக்சபா தேர்தலுக்கு முன்னர் மத்திய பிரதேசம்,சத்தீஷ்கர், மிஷோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தன. லோக்சபா தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக் தேர்தல். அடுத்து வரவுள்ள 6 மாதங்களில் அரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில தேர்தல்கள் என்று எப்போதும் நாட்டில் தேர்தல்கள் நடந்த வண்ணமே இருப்பது வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த முடியாமைக்கு முக்கிய காரணம் என்று மோடி நினைக்கிறார்.செலவு குறையும் :


அதேபோல, தேர்லுக்கான செலவினங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மிச்சமாகும். எனவே தான், தேர்தல் கமிஷனும் இதற்கு சம்மதித்து விட்டது. இனி மீதமிருக்கும் தடை அரசியல் மட்டும் தான்.
அரசியலமைப்பு சிக்கல் :அதில் தான் ஒரு சிக்கல், அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டமன்றங்களை கலைக்க வேண்டியிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அரசியல் அமைப்பு சட்டத்தின் 83( 2) பிரிவும், 172 வது பிரிவும் பாதுகாக்கின்றன. மாநில அரசுகளை கலைக்க வழியுள்ள ஒரே பிரிவு 356 மட்டும் தான். எனவே தான் அனைத்து கட்சியின் பொதுக்கருத்து தேவைப்படுகிறது.


வளர்ச்சிக்கு தேவை :


எனவே, தேசத்தின் வலிமையை தேர்தல்களிலேயே செலவழிப்பதை விட்டுவிட்டு, வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பிரதமர் மோடிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்து பலமாக எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
18-ஜூன்-201919:59:51 IST Report Abuse
J.Isaac 43 % குற்றபிண்னனியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நம் நாட்டிற்கு தேர்தல் எனபது அர்த்தமற்றது
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
18-ஜூன்-201914:00:55 IST Report Abuse
bal நிச்சயம் சத்தியம்...இப்போது ஏன் வெவ்வேறு வருடங்களில் நடப்பதென்றால் அதற்கு காங்கிரெஸ்த்தான் காரணம்...அவர்கள் நினைத்தபோது ஆட்சியை கவிழ்த்தனர்...பின்னர் தேர்தல் இல்லேன்னா சுதந்திரத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது...இப்போதெல்லாம் ஆட்சி கவிழ்வதில்லை. அப்படியே ஆனாலும் கர்நாடகாவில் உள்ளது போல் ஆட்சி இருந்தால் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
18-ஜூன்-201909:58:41 IST Report Abuse
Nandha Kumar வரவேற்க வேண்டிய திட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X