பதிவு செய்த நாள் :
பா.ஜ.தேசிய தலைவராக அமித்ஷா தொடர்கிறார்:
செயல் தலைவராக நட்டா நியமனம்

புதுடில்லி: மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் தேசிய தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்கிறார். அதே நேரத்தில், கட்சியின் செயல் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர், ஜே.பி. நட்டா, 58, நியமிக்கப்பட்டுள்ளார்.

Nadda,BJP,Amit Shah


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது. பா.ஜ., தலைவர், அமித் ஷா, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதே, கட்சிக்கு புதியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'இந்தாண்டு பல்வேறு மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடப்பதாலும், உட்கட்சித் தேர்தல் நடத்த உள்ளதாலும், கட்சியின் தலைவராக, அமித் ஷா தொடருவார்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கட்சியின் உயர் அமைப்பான, பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கட்சியின் முன்னாள் தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங் கூறியதாவது:

கட்சித் தலைவர் அமித் ஷா தலைமையில், பா.ஜ., பல தேர்தல்களில் வென்று உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசில், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதால், கட்சித் தலைமை பொறுப்பை வேறொருவருக்கு அளிக்கும்படி, அமித் ஷா கோரியிருந்தார். கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டத்தில், கட்சியின் செயல் தலைவராக, ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உட்கட்சித் தேர்தல் நடக்கும் வரை, அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., ஆளும் மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு இந்தாண்டில் தேர்தல் நடக்க உள்ளது. அதனால், கட்சித் தலைவராக, அமித் ஷா தொடருவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த நட்டா, மூன்று முறை,

Advertisement

எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். கடந்த, 2014ல், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி தலைமையிலான முந்தைய அரசில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

கட்சி நிர்வாகம் மற்றும் தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் நிபுணரான, நட்டா, கட்சியின் தலைமை மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு பெற்றவர். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலப் பொறுப்பாளராக செயல்பட்டார். மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், பா.ஜ., 62ல் வெற்றி பெற்றதற்கு, அவருடைய தேர்தல் வியூகங்களே முக்கிய காரணம்.


Advertisement

வாசகர் கருத்து (7+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூன்-201916:30:24 IST Report Abuse

இந்தியன் kumarகட்சியில் திறமை இருந்தால் யாரும் தலைவராகலாம் அது தான் பாஜக

Rate this:
P.Rengaraj - Madurai,இந்தியா
18-ஜூன்-201915:13:33 IST Report Abuse

P.Rengarajசெயல் தலைவர் என்று பதவி தந்திருப்பதன் மூலம் ஆட்சி, கட்சி இரண்டிலும் மோடி- ஷா இவர்களின் இரும்புப்பிடி மேலும் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது. அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில் நட்டா தனது திறமையை இனி வரும் களங்களில் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம். தனது இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் மோடி அவர்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் நிறைய நன்மைகளை வழங்குவார் என்று நம்பலாம்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
18-ஜூன்-201911:21:04 IST Report Abuse

ganapati sbபுதிய தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துக்கள் அணைத்து மாநிலங்களிலும் அமித்சா போல அதிரடியை தொடரவும்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X