பதிவு செய்த நாள் :
உற்சாகம்!
புதிய, எம்.பி.,க்கள் பதவியேற்பு விழாவில்..
தாய் மொழியில் அசத்திய அமைச்சர்கள்

புதுடில்லி,: புதிய லோக்சபாவின் முதல் கூட்டம், நேற்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடிஉள்ளிட்டோர், எம்.பி.,க்களாக பதவியேற்றனர். மோடி பதவியேற்றபோது, பா.ஜ.,வினர் மேஜையைத் தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தாய் மொழியில் பதவியேற்று, அசத்தினர்.

புதிய எம்.பி., பதவியேற்பு விழா,உற்சாகம்,தாய் மொழி,அசத்திய அமைச்சர்கள்


லோக்சபாவுக்கான தேர்தல், ஏப்., - மே மாதங்களில் நடந்தது. அதில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி; மீண்டும் பிரதமரானார். கடந்த மாத இறுதியில், மத்திய அமைச்சரவை பதவியேற்றது.அதைத் தொடர்ந்து, 17வது லோக்சபாவின் முதல் கூட்டம், நேற்று துவங்கியது. ஜூலை, 26 வரை இந்தக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது. எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நேற்று பதவியேற்றனர்; இன்றும், அது தொடர்கிறது.

பட்ஜெட் தாக்கல்


நாளை, லோக்சபா சபாநாயகருக்கான தேர்தல் நடக்க உள்ளது. வரும், 20ல், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இதையடுத்து, ஜூலை, 5ல், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஜனாதிபதி மாளிகையில், நேற்று காலை நடந்த எளிய நிகழ்ச்சியில், லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக, பா.ஜ., மூத்த தலைவர், வீரேந்திர குமார், 65, பதவியேற்றார்.மத்திய பிரதேசத்தின், திகம்கர் தொகுதியின், எம்.பி.,யான அவருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி தலைமையிலான முந்தைய அரசில், அமைச்சராக பணியாற்றியவர், வீரேந்திர குமார்.

புதிய, எம்.பி.,க்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், புதிய சபாநாயகருக்கான தேர்தலையும் அவர் நடத்துவார்.லோக்சபா நேற்று கூடியதும், சபையின் தலைவரான, பிரதமர் நரேந்திர மோடியை, எம்.பி.,யாக பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது, பா.ஜ., உட்பட, ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த, எம்.பி.,க்கள், மேஜையைத் தட்டி பலத்த வரவேற்பு அளித்தனர். 'மோடி, மோடி' என்றும், 'பாரத் மாதா கீ ஜெய்' என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

மோடியைத் தொடர்ந்து, சபையை நடத்துவதற்கு, தற்காலிக சபாநாயகருக்கு உதவ அமைக்கப்பட்டு உள்ள குழுவைச் சேர்ந்த, கே.சுரேஷ், பிரிஜ்பூஷண் சரண் சிங், பி.மஹதப் பதவியேற்றனர்.அவர்களைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சரும்,பா.ஜ., தலைவருமான அமித் ஷா; ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

பிராந்திய மொழிகள்


நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், பல்வேறு மாநில மொழிகள், லோக்சபாவில் ஒலித்தன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரும்பாலான மத்திய அமைச்சர்கள், ஹிந்தியில்பதவிப் பிரமாணம் செய்தனர்.அதே நேரத்தில், மத்திய அமைச்சர்கள், ஹர்ஷ்வர்தன், ஸ்ரீபத் நாயக், அஸ்வினி சவ்பே, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர், சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

மத்திய அமைச்சர்கள், டி.வி.சதானந்த கவுடா, பிரஹலாத் ஜோஷி,கன்னடத்திலும்; ஹர்சிம்ரத் கவுர் பாதல், பஞ்சாபி மொழியிலும்பதவியேற்றனர். மத்திய அமைச்சர்கள், அரவிந்த கணபத் சாவந்த், ராவ்சாஹிப் படேல் தான்பே, மராத்தியிலும்; ஜிதேந்திர சிங், டோங்கிரியிலும் பதவியேற்றனர். பபுல் சுப்ரியோ, ஆங்கிலம்; ராமேஸ்வர் தெலி, அசாமி; தேபஸ்ரீ சவுத்ரி, வங்க மொழியிலும் பதவியேற்றனர். பிஜு ஜனதா தளத்தின் மஹதப், ஒடியா மொழியில் பதவியேற்றார்.

பெண் துறவி, பிரக்யா தாக்குர், பதவி ஏற்ற போது, தன்னை, 'சாத்வி' என, குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை, சாத்வி என்பதை தவிர்த்து, பிரக்யா தாக்குர் பதவியேற்றார்.

'ஜெய் ஸ்ரீராம்'


மேற்கு வங்கத்தில், லோக்சபா தேர்தலின் போது,'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பப்பட்டதற்கு, மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில், பா.ஜ.,வினர் போராட்டதில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பா.ஜ.,வின் பபுல் சுப்ரியோ, தேபஸ்ரீ சவுத்ரிஆகியோர், லோக்சபாவுக்கு நேற்று வந்தபோது,பா.ஜ., - எம்.பி.,க்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறி,வரவேற்றனர்.

ராகுல் எங்கே?


சபை நடவடிக்கைகள் துவங்கியதும் பல்வேறு கட்சியின் முக்கியதலைவர்கள் வந்திருந்தனர். ஆனால், காங்., தலைவர், ராகுல் மட்டும் காணப்படவில்லை. மோடி பதவியேற்றதும், இந்தியக் குடியரசு கட்சியின், ராம்தாஸ் அத்வாலே, ''ராகுல் எங்கே'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, காங்., தரப்பில் இருந்து, 'அவர் இங்குதான் இருக்கிறார்; சபைக்கு வருவார்' என்று கூறினர். லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல், கேரளாவின், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

சமூக வலைதளத்தில், நேற்று மதியம் வெளியிட்ட செய்தியில், 'நான்காவது முறையாக, எம்.பி.,யாக பதவியேற்க உள்ளேன். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, இந்த நாட்டு மக்களுக்கு உண்மையானவாக செயல்படுவேன்' என, ராகுல் குறிப்பிட்டிருந்தார். மதியத்துக்குப் பிறகு, சபைக்கு வந்த அவர், எம்.பி.,யாக பதவியேற்றார். இதனால், ராகுல் குறித்த, 'சஸ்பென்ஸ்' முடிவுக்கு வந்தது.

'நாம் எல்லோரும் ஒன்று தான்'


லோக்சபா கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, நிருபர்களிடம் கூறியதாவது:இங்கு ஆளும் தரப்பு, எதிர்க்கட்சித் தரப்பு என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. நாம் அனைவரும் எந்த பாகுபாடும் இல்லாமல், நாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டும்.இந்தக் கூட்டத் தொடர் சிறப்பான வகையில் நடைபெறும் என, எதிர்பார்க்கிறேன். பார்லிமென்ட் ஜனநாயகத்தில், எதிர்க்கட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. எண்ணிக்கையை பார்க்காமல், எதிர்க்கட்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நாங்கள் மதிப்பளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூன்-201916:26:53 IST Report Abuse

இந்தியன் kumarஎதிர்கட்சிகளையும் அரவணைக்கும் மோடிஜி இஸ் கிரேட்

Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூன்-201913:50:19 IST Report Abuse

Yezdi K DamoThis happiness is to loot the money not for the public service.

Rate this:
Suresh - chennai,இந்தியா
18-ஜூன்-201908:57:16 IST Report Abuse

Sureshவெ. நாயுடு வேஷ்டி சட்டையோட எப்போதும் வலம் வர்றாரே. திருப்பதிக்கு போனா ஒகே. டில்லிக்கு போனாலும் அதேதானா? வைஸ் ப்ரெசிடெண்டுக்கு டிரஸ் கோட் எதுவும் கிடையாதா? ஸ்டார் ஹோட்டல்லயே வேஷ்டி சட்டைக்கு அனுமதி இல்லைன்னு நியூஸ் வந்துச்சே, ஞாபகம் இருக்கா?

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X