பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வரி ஏய்ப்பு,செய்பவர்களுக்கு,கிடுக்கி

புதுடில்லி: வருமான வரி ஏய்ப்பு செய்வோர், வௌிநாடுகளில் பணத்தை பதுக்கியோர், 'பினாமி' பெயரில் சொத்துகள் குவித்தோர் மீது, கடும் நடவடிக்கைகள் எடுக்க வகை செய்யும், புதிய விதிமுறைகள், நேற்று முதல், அமலுக்கு வந்துள்ளன. இதனால், வரி ஏய்ப்பு செய்வோர் என, தெரிய வந்தால், 'ரெய்டு' உட்பட, கடும் நடவடிக்கைகளில் இருந்து, அவர்கள் தப்ப முடியாது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் வருமான வரி, நேரடி வரியாக கருதப்படுகிறது. இந்த வரி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்தது. வரி வீதத்தை அதிகரிக்காமல், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தான், அரசின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அதுபோல, வரி ஏய்ப்போர் மீது, தற்போதைய விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் படி மென்மையான போக்கு கடை பிடிக்கப்படுகிறது. அபராதம் அல்லது கூடுதல் வரி செலுத்தி, அவர்கள் தப்பிக்கும் நிலை உள்ளது. அதற்குப் பதில், வரி ஏய்ப்பை கடும் குற்றமாக கருதி, அவற்றிலிருந்து வரி ஏய்ப்போர் தப்பிக்காத வகையில், புதிய விதிமுறைகள், நேற்று முதல் அமலாகியுள்ளன.
வருமான வரிச்சட்டம், 1961ன் கீழ், நேரடி வரி முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள, 32 பக்க புதிய விதிமுறைகள்,

வரி ஏய்ப்போருக்கும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும், சிம்ம சொப்பனமாக திகழும். குறிப்பாக, பண மோசடியில் ஈடுபட்டோர், பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேகரிப்போர், லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகள் மூலம் பணம் சேர்த்தோர், பிறர் பெயரில் சொத்துகளை வாங்கியோர், வௌிநாடுகளில் சொத்து குவித்தோர் போன்றோர், வருமான வரி சட்டத்தின் கிடுக்கிப்பிடியிலிருந்து, இனி தப்ப முடியாது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டோர், வழக்கு அல்லது சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க, வரிச்சட்டங்களில் இருந்த ஓட்டைகளை பயன்படுத்தினர். ஆனால், புதிய விதிமுறைகள், இதற்கு நெத்தியடி கொடுத்துள்ளது. 'நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றங்களில் இருந்து இனி யாரும் தப்பிக்க முடியாது' என, நேரடி வரிகள் வாரியம், அதிரடியாக தெரிவித்துள்ளது.

வரி மோசடி புகாரில் சிக்கியுள்ளோரின் நடத்தை, குற்றத்தின் தன்மை, குற்றத்திற்கான சூழல் போன்றவற்றை ஆராய்ந்த பிறகு தான், அத்தகைய நபர்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படும். குறிப்பாக, பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதி சேகரித்தோர், தேச விரோத செயல்களில் ஈடுபட்டோர் போன்றோர் மீதான புகாரை, அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ., போன்ற, மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிப்பது தெரிந்தால், அத்தகைய நபர்களுக்கு, வருமான வரிச்சட்டம் எவ்வித தளர்வையும், இனிமேல் தராது.
அதுபோல, முறையற்ற வருமானம் மூலம், வெளிநாடுகளில் சொத்து குவித்தோர், வௌிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோர், புதிய விதிமுறைகளின் கீழ் தப்ப முடியாது. அத்தகையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ரெய்டு எனப்படும்,

சோதனையிலிருந்து தப்பிக்க, இனிமேல் வாய்ப்பே இல்லை.
மேலும், நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காதது; சோதனைக்கு மறுப்பது; பறிமுதலை தடுப்பது போன்றவையும், இனிமேல் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும்.
அத்தகைய குற்றங்களுக்கு, இது வரை காட்டப்பட்டு வந்த தளர்வான விதிமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. அதுபோல, வருமான வரி சட்டத்தின் கீழ், இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றோர், புதிய வரி ஏய்ப்பு குற்றங்களில் சிக்கினால், அவர்கள் பாடு, 'அம்போ' தான்!இதுபோன்ற சில வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டோர் மீதான தண்டனை தளர்வு நடவடிக்கையை, இனி, மத்திய நிதியமைச்சர் தான் எடுக்க முடியும்.
நேற்று அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள், அவருக்கு தான் அதிகாரத்தை அளித்துள்ளன. அதற்கு முன் அவர், நேரடி வரிகள் வாரியத்திடம், தகவல்களை பெற்று, தக்க முடிவெடுப்பார். அதுபோல, ஜி.எஸ்.டி., வரி முறையில் நிலவும் சிக்கல்கள், அதை ஏய்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது போன்ற அம்சங்கள் குறித்து முடிவெடுக்க, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில், வரும், 21ல், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் கூட உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
18-ஜூன்-201920:04:59 IST Report Abuse

Krishnamurthy Venkatesanகாவல் துறையில் உள்ள ஒரு சாதாரண கான்ஸ்டபிளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் மரியாதையும், பவ்யமும், பயமும் வருமானவரித்துறை இன்ஸ்பெக்டருக்கு கிடைப்பதில்லை. வ.வ.துறை இன்ஸ்பெக்டர்கள் ஒரு நோட்டீஸ் கூட சரியான முறையில் serve செய்யமுடியாமல் மிகவும் பரிதாபத்துக்கு உள்ளவர்கள். assessee யால் மிரட்டப்படுகிறார்கள்.

Rate this:
Natesan Murugan - Coimbatore,இந்தியா
18-ஜூன்-201918:53:47 IST Report Abuse

Natesan Muruganவரி வசூலிப்பில் காட்டும் முனைப்பை கொஞ்சன் நாடு முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க காட்டலாமே .....பணம் மட்டும் கஜானாவுக்கு வரணும் என்று அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்ற மக்கள் ஜீவாதார பிரச்னைகளுக்கு கொஞ்சம் மூளையை செலவு செய்யலாமே ...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜூன்-201918:37:48 IST Report Abuse

தமிழ்வேல் ரெயிடு மேல எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை.

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X