பொது செய்தி

தமிழ்நாடு

மாதவரத்தில் குளம் தூர் வாரும் பணி துவக்கம்

Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 மாதவரத்தில் குளம் தூர் வாரும் பணி துவக்கம்

தண்ணீர் தட்டுப்பாடு, தமிழகத்தை உலுக்கும் நிலையில், நீர்நிலைகளை மேம்படுத்த, இனி அரசை எதிர்பார்க்காமல், ஆங்காங்கே பொதுமக்கள், தன்னார்வ அமைப்புக்கள், நலச்சங்கங்கள் களம் இறங்கி வருகின்றன.
இந்த வரிசையில், மாதவரத்தில், நலச்சங்க கூட்டமைப்பு ஒன்று, சென்னை மாநகராட்சி அனுமதி பெற்று, அப்பகுதி குளத்தை துார்வாரும் பணியில் களம் இறங்கி உள்ளது.ஆக்கிரமிப்புசென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 33வது வார்டு, பொன்னி அம்மன்மேடு பகுதியில், மாநகராட்சி பராமரிப்பில், 1.41 ஏக்கர் பரப்பிலான குளம் ஒன்று உள்ளது. குளப்பன் குளம் என, அழைக்கப்படும் இந்த குளத்தின், நீர்வரத்து கால்வாய்கள், ஆக்கிரமிப்பில் சிக்கின. வெயில் காரணமாக, குளம் வறண்டு, தற்போது, சிறிதளவு நீர் மட்டும், குட்டை போல தேங்கி உள்ளது.இதனால், சுற்றுப்புற பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மழைநீர் சேமிப்பின் மகத்துவத்தை புரிந்து கொண்ட, மாதவரம் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர், குளப்பன் குளத்தை துார்வாரி சீரமைக்க முன்வந்துள்ளனர்.தற்போது, 8 அடி ஆழம் கொண்ட குளத்தை, மேலும், 2 - 3 அடி வரை ஆழப்படுத்தவும், குளத்தின் மையப்பகுதியில், கூடுதலாக, 2 அடி வரை, ஆழப்படுத்தவும், கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த பணியை, ஒரு வாரத்தில் முடிக்க முடிவு செய்துஉள்ளனர்.ஒருங்கிணைப்புஅதற்காக, கூட்டமைப்பினர், சென்னை மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்றனர். நேற்று முன்தினம் காலை, அதற்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி, குளத்தின் கரையில் நடந்தது.கூட்டமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொன்னிஅம்மன்மேடு, குளப்பன் குளத்தை துார்வாரி, ஆழப்படுத்தும் பணியை, கூட்டமைப்பினர் துவக்கினர்.
பங்கேற்கவில்லை
இந்த நிகழ்ச்சியில், மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்பர் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், யாரும் பங்கேற்கவில்லை. அலுவலக பணி எனக்கூறி, அனைவரும் நழுவினர். தற்போதைய, அத்தியாவசிய பணியான, நீர்நிலைகள் சீரமைப்பில், நலச்சங்கங்கள் ஆர்வமுடன் ஈடுபடும் நிலையில், அவர்களை ஊக்குவிக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும். இப்படி நழுவுவது, ஊக்கத்தை குறைக்கும் என்பதை, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.மாதவரம் நலச்சங்க கூட்டமைப்பின், இந்த சமுதாய பணியை பாராட்ட விரும்பினால், கூட்டமைப்பின் தலைவர், நீலக்கண்ணனை, 98410 19931 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இனி வரும் காலத்தில், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை தவிர்க்க, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு, குளத்தை துார்வார களம் இறங்கி உள்ளோம். அதற்காக, இந்த குளப்பன் குளம் துார்வாரும் பணிக்கு, வீட்டுக்கு ஒருவர் முன் வந்து, தங்களால் இயன்ற உடல் உழைப்பை கொடுத்து, உதவ வேண்டும்.மாதவரம் மண்டலத்தில், ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள குளம் மற்றும் மழைநீர் வரத்து கால்வாய், சாலைகளை, சட்டப்படி மீட்க வேண்டும் என்பதே, கூட்டமைப்பின் லட்சியம். மழைநீர் சேமிப்பு இல்லாத கட்டடங்களுக்கு, அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது. தலைக்கவசம் அணிவதை சட்டமாக்கியது போல், மழைநீர் சேமிப்பையும் சட்டமாக்கி, பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும்.து. நீலக்கண்ணன், 60,தலைவர், மாதவரம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, மாதவரம்.மாநகராட்சி நிபந்தனை என்ன?
துார்வாரப்படும் குளத்தில், மாலை, 5:00 மணிக்கு மேல், ஜே.சி.பி., இயந்திரத்தை இயக்கக் கூடாது
துார்வாரும் மண்ணை, லாரிகளில், வெளியே எடுத்துச் செல்லக் கூடாது
குளத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணை, கரையை பலப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்இந்த நிபந்தனைகளை, கூட்டமைப்பினர் ஏற்று, துார்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜூன்-201907:47:25 IST Report Abuse
Bhaskaran பாராட்டுக்கள் மக்கள்தான் இனி தங்களை காத்துக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கிக்கொள்ளனும் ,கையாலாகாத அரசும் அதிகாரிகளும் எதற்கு பின் வரி வசூல் செய்யறாங்க ,நாசமாப்போற பாவிங்க
Rate this:
Share this comment
Cancel
NAGHARAJAN S N - chennai,இந்தியா
18-ஜூன்-201906:59:27 IST Report Abuse
NAGHARAJAN S N 16-06-2019 தினமலர் களமிறங்குவோம் நமக்கு நாமே வழி காட்டுதலில் மாதவரம் Nala sangham எடுத்த முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். இதே நடவடிக்கை மாநிலம் பூராவும் தொடர எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்புரிவார் என நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X