பதிவு செய்த நாள் :
மோடிக்கு தி.மு.க., செலுத்திய 'முதல் வணக்கம்'

புதிய லோக்சபாவின், முதல் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, பிரதமர் நரேந்திரமோடிக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து, வணக்கம் செலுத்தியது, அனைவரையும் கவரும்படி இருந்தது.

 மோடி,Modi,DMK,தி.மு.க.,முதல் வணக்கம்


சபைக்கு உள்ளே வரும் பிரதமர், தன் இருக்கையில் அமர்வதற்கு முன், முன்வரிசையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரையும், அவர்களது இருக்கைக்கே சென்று, வணக்கம் செலுத்துவது மரபு. இந்த சமயத்தில், பிரதமரின் கவனத்தைப் பெறலாம் என்பதால், சபையின் முதல் அரை வட்ட வடிவ இருக்கை வரிசைக்கு, எம்.பி.,க்கள் மத்தியில், ஏக கிராக்கி இருக்கும். இந்த முறை, முதல் இரண்டு வரிசைகளை, தி.மு.க., - எம்.பி.,க்களே ஆக்கிரமித்து அமர்ந்திருந்தனர்.

டி.ஆர்.பாலு, ராஜா, ஜெகத்ரட்சகன் ஆகியோர், ஒரு மேஜைக்கு முன்பும், இன்னொரு மேஜைக்கு முன்,

காங்., மூத்த தலைவர் சோனியாவோடு சேர்ந்து, கனிமொழி, தயாநிதி ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.சபைக்கு, பிரதமர் வந்த அதேநேரத்தில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கும் வந்து சேர்ந்தார். அவரது இருக்கை, சோனியாவுக்கு பக்கத்து சீட்.எனவே, கனிமொழியும், தயாநிதியும் ஒருவரையொருவர் பார்த்தபடி, யார் விட்டுக் கொடுப்பது என, சங்கடத்தில் தவித்தனர். பின், கனிமொழி, மூன்றாவது வரிசையில் உள்ள, தன் தோழி சுப்ரியா சுலேயுடன் போய் அமர்ந்தார். இந்த நேரத்தில், மோடி உள்ளே வர, தி.மு.க., -எம்.பி.,க்கள், பவ்யமாக எழுந்தனர்.

டி.ஆர்.பாலு, ராஜா, ஜெகத்ரட்சகன், தயாநிதி ஆகியோர், மோடிக்கு வணக்கம் செலுத்தி, அவருடன் கைகுலுக்கினர். கனிமொழியும் ஆர்வத்துடன் வந்து, பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார். ரொம்ப பின்னால் இருந்த, காங்கிரஸ், எம்.பி., ஜோதி மணி, விறுவிறுவனெ ஓடோடி வந்து, தன் பங்கிற்கு, பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார்அப்படியே போய், சோனியாவுக்கும் வணக்கத்தை வைத்துவிட்டு திரும்பினார்.

வேறெந்த மாநில, எம்.பி.,க்களைக் காட்டிலும், தமிழக, எம்.பி.,க்கள் காட்டிய, இந்த ஆர்வம் கலந்த முதல் வணக்கம், பார்வையாளர் மாடத்தில்

Advertisement

இருந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அ.தி.மு.க.,வின் ஒரே, எம்.பி.,யான ரவீந்திரகுமார், சபைக்கு புதியவர் என்பதால், மதிய உணவுக்காக, பார்லிமென்டில் கேன்டீன் எங்கே உள்ளது என, தெரியாமல் தவித்தார். கடைசியில், முன்னாள், எம்.பி., சுந்தரம், அவரை அழைத்துச் சென்றார்.

அகரவரிசைப்படி, மாநில வாரியாக, எம்.பி.,க்கள் பதவியேற்கும் நிலையில், தமிழக, எம்.பி.,க்கள், இன்று தான் பதவியேற்க உள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட, தமிழக, எம்.பி.,க்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும், 'விசிட்டர் பாஸ்கள்' பெறப்பட்டுள்ளதால், இன்று பார்லி.,யில், தமிழக முகங்கள் பெரும் எண்ணிக்கையில் குவிய உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
24-ஜூன்-201916:29:32 IST Report Abuse

karutthuநம்ம மக்கள் செய்த மடத்தனம் தான் வேறு என்ன சொல்வது

Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
24-ஜூன்-201907:45:57 IST Report Abuse

B.s. PillaiThe whole world knows how much respect the DMK and its allies had shown to our P.M. in the last period. They floated black balloon in the air when he was to come to Tamil Nadu by flight. When an ordinary person like me can not forget this incident, do you think that the person who was directly hit can ever forget ?Tamil Culture is that even if your opponent comes to your door, you are to show him respect and invite him as your guest. All these cultural refinement can not be expected from DMK and its elected members.If htey show any humbleness, it is only drama to escape punishment for the corruption they had done during MMS Sonia regime . 2G , misuse of power by unofficially laying cable for Sun TV , erecting exchange unofficially thereby bringing loss to Government 400 Crore loan to SunTV are threatening them now, as Modi had initiated action agianst top ranking officers of Income Tax and Custom officers" Ivanga ellar vayuthileyum puzhiye karraikkudu ".

Rate this:
Karunan - udumalpet,இந்தியா
19-ஜூன்-201907:54:12 IST Report Abuse

Karunanதிருட்டு கூட்டத்தை சேர்ந்த ஒருத்தர் நாகரிகம் பேசின் நகைப்பிற்க்கு இடமானதன்றோ?

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X