கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குரூப் - 1 தேர்வில் நடந்த குளறுபடி:
ஐகோர்ட்டில் தேர்வாணையம் பதில்

சென்னை: நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படையில், முதல்நிலை தேர்வின் விடைத்தாள் திருத்தம் துவங்கி, முடிவுகள் வெளியிடப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளித்துள்ளது.

குரூப் - 1,தேர்வு,குளறுபடி,ஐகோர்ட்,தேர்வாணையம்,பதில்


உயர் நீதிமன்றத்தில், விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'குரூப் - 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு, மார்ச் மாதம் நடந்து, ஏப்ரலில் முடிவுகள் வெளியாகின. இதில், 18 கேள்விகள் தவறானவை; முதல்நிலை தேர்வுக்கான திருத்திய விடையை வெளியிடவும், அதுவரை, பிரதான தேர்வுக்கு தடை விதிக்கவும், உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு, நீதிபதி, வி.பார்த்திபன் உத்தரவிட்டார்.

தேர்வாணையம் தரப்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை, வரும், 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், துணைச் செயலர் தாராபாய் தாக்கல் செய்த பதில் மனு:

முதல்நிலை தேர்வின், 'கீ' விடைகள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கேள்விகள்; அதற்காக அளிக்கப்பட்ட பதில்கள்; கீ விடைகளில் தவறு ஏதும் இருந்தால், அதை குறிப்பிட்ட நாட்களுக்குள், தேர்வாணையத்தின் கவனத்துக்கு, தேர்வு எழுதியவர்கள் தெரியப்படுத்தி, தவறுகளை சரி செய்யும் நோக்கில், வெளியிடப்பட்டன.கீ விடைகள் வெளியான பின், 4,390 முறையீடுகள் வந்தன. 96 கேள்விகள் குறித்து, நிபுணர் குழுவின் முடிவுக்கு வைக்கப்பட்டது.

ஒன்பது பாடங்களில், ஒவ்வொன்றுக்கும், மூன்று நிபுணர்கள் என நியமிக்கப்பட்டு, பரீசீலனை செய்தனர். பின், இறுதி கீ விடையை, ஆணையத்துக்கு அளித்தனர். அதன்படி, 12 கேள்விகளுக்கான விடைகள், தவறாகவோ அல்லதுகேள்விகள் சரிவர இல்லாமலோ இருந்தன. ஐந்து கேள்விகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கேள்விக்கும் அளிக்கப்பட்ட பதில்களில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விடைகள் சரியாக இருந்தன.

Advertisement

ஏழு கேள்விகளைப் பொறுத்தவரை, கீ விடைகள் மட்டுமே, தவறாக இருந்தன.நிபுணர் குழு பரிந்துரையின்படி, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மனுதாரரைப் போன்ற தேர்வர்கள் சுட்டிக்காட்டியதில், 10 கேள்விகளில், ஆறு கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதனால், தேர்வாணையம் மேற்கொண்ட நடவடிக்கையால், அவர் பயன் அடைந்துள்ளார்.

தேர்வு நடவடிக்கைகள் முழுமையாக முடிவுற்ற பின், இறுதி கீ விடைகள் வெளியிடப்படும். இந்த நடைமுறை தான், 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. எனவே, தற்போதைய கட்டத்தில், தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் வெளியிடக் கோருவது சரியல்ல. மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
18-ஜூன்-201915:40:41 IST Report Abuse

Needhiyin Pakkam Nil இதற்கெல்லாம் நம்மாளுங்களால பதில் கண்டுபிடிக்கவே முடியாது.............

Rate this:
Rajan - singapore,சிங்கப்பூர்
18-ஜூன்-201915:05:24 IST Report Abuse

Rajanதகுதி இல்லாத தேர்வாணையம்

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
18-ஜூன்-201910:39:25 IST Report Abuse

நக்கீரன்தமிழக அரசின் ஊழியர்களை தேர்வு செய்யும் அமைப்பு இப்படி பொறுப்பற்ற முறையில் தான் தோன்றி தனமாக பதில் சொல்வது வெட்கக்கேடானது. பலரின் வாழ்க்கையில் எளிதாக விளையாடுகிறார்கள். இவர்களால் எத்தனையோ பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஆனாலும், இவர்களுக்கு என்ன தண்டனை? நீதிமன்றமும் எச்சரித்து விட்டு விடும். தவறு செய்தோர் அனைவரும் அவர்களது வேலையில் இருந்து நீக்கப்பட வேண்டும். செய்த தண்டனைக்கு சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். செய்யுமா இந்த "நிதி" மன்றம்? பார்க்கலாம்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X