பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.500, 700க்கு விலை போகும் நடிகர்கள் :
சட்டசபை தேர்தல் போல விளையாடுகிறது பணம்

சென்னை : நடிகர் சங்க தேர்தலில் வாக்காளர்களை கவர பணம், பிரியாணி உள்ளிட்ட சகல கவனிப்பும் அமர்க்களமாக அரங்கேறி வருகிறது.

நடிகர் சங்கம்,தேர்தல்,விளையாடுது,பணம்


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள மகளிர் கல்லுாரியில் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலருக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். சங்கரதாஸ் அணியில் பொதுச் செயலர் பதவிக்கு ஐசரி கணேஷும் தலைவர் பதவிக்கு பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். இரண்டு நாட்களாக இரண்டு அணியினரும் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தலை போலவே நடிகர் சங்க தேர்தலிலும் பண மழை கொட்ட ஆரம்பித்துள்ளது.

இரண்டு அணியினரும் வாக்காளர்களை கவர பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றனர். விஷால் அணி சார்பில் தினமும் 500 ரூபாயும் பாக்யராஜ் அணி சார்பில் 700ரூபாயும் தரப்படுகிறது. அனைவருக்கும் மதிய உணவு உள்ளிட்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 22ம் தேதி வரை அந்தந்த அணியின் தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு செல்லும் நடிகர் நடிகையர் பதிவேட்டில் கையெழுத்து போட்டு உறுப்பினர் எண் முகவரியை கொடுத்தால் போதும்; பணம் தரப்படுகிறது.சிலர் இரண்டு அணிக்கும் சென்று பணம் பெற்று வருகின்றனர்.

ஜூன் 22ம் தேதி வரை பண மழை பொழிய உள்ளது. தேர்தல் நாள் அன்று ஓட்டுக்கு அதிகபட்சம் 3000 ரூபாய் வரை கிடைக்கும் என பலர் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே தேர்தல் அதிகாரி மூலம் வெளியாக வேண்டிய தகவல்கள் விஷாலிடம் இருந்து வெளியாவதாக பாக்யராஜ்புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் ''தேர்தல் அறிக்கைகள் விஷால் பெயரில் வெளிவருகின்றன. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்'' என்றார்.

Advertisement

ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம்


கரூரில் நேற்று நாடக நடிகர்கள் மத்தியில் நடிகர் விஷால் பேசியதாவது:எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பக்கம் போகாமல் தேர்தல் வரும் போது மீண்டும் வரும் அணி இல்லை பாண்டவர் அணி. உங்களுக்கு வரும் ஓய்வூதியத்தை நிறுத்த ஒரு அணி வருவர். உங்கள் ஓட்டுகளை பேரம் பேசுவர்.

அந்த அணியினர் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தர உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் பாண்டவர் அணியிடம் பணம் இல்லை. நாங்கள் ஓட்டுக்காக பணம் கொடுக்க மாட்டோம். 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சங்க கட்டடத்தை விழுங்க ஒரு கூட்டம் வருகிறது. எனவே கவனமாக பாண்டவர் அணிக்கு ஓட்டுப் போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
18-ஜூன்-201910:41:02 IST Report Abuse

நக்கீரன்விளங்கிடும் நாடு.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஜூன்-201907:53:19 IST Report Abuse

Natarajan Ramanathan. நோட்டா இருந்தால் தேவலை.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
18-ஜூன்-201906:32:21 IST Report Abuse

Indhuindianதலைப்பை வன்மையாக கண்டிக்கிறேன் சட்ட சபை தேர்தலில் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை என்று நீங்களே செய்தி போட்டுவிட்டு வெறும் பிசாத்து அறுநூறு ஏஷுநூறு ரூபாய்க்கு விலை போகும் இந்த நடிகர் சங்க தேர்தலை சட்ட சபை தேர்தலோடு ஒப்பிட்டது மிகவும் தவறு மன்னிப்பு கேட்காவிட்டால் திருமங்கலம் பார்முலா, ஆர் கே நகர் பிஆர்முலா வெல்லாம் வெறும் கட்டுக்கதையா?

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X