தற்கொலைப்படை தாக்குதல் 30 பேர் பலி| Dinamalar

தற்கொலைப்படை தாக்குதல் 30 பேர் பலி

Added : ஜூன் 18, 2019
 தற்கொலைப்படை தாக்குதல்  30 பேர் பலி

கானோ:ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், கால்பந்து போட்டியை, 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்தில், 'போகோ ஹராம்' பயங்கரவாதிகள் நேற்று நடத்திய, மனித வெடிகுண்டு தாக்குதலில், 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது, கொண்டுகா நகரம். உள்ளூர் கால்பந்து போட்டியின் ஆட்டத்தை, இங்குள்ள மைதானம் ஒன்றில் இருந்த பிரமாண்டமான, 'டிவி'யில், நுாற்றுக்கணக்கான ரசிகர்கள், நேற்று பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி வந்த, ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதிகள் மூவர், ரசிகர்கள் கூட்டத்தில் புகுந்து, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.இதில், 30க்கும் மேற்பட்ட அப்பாவிகள், உடல் சிதறி பலியாகினர். நுாறுக்கும் மேற்பட்டோர், படுகாயம் அடைந்தனர்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான, போகோ ஹராம் பயங்கரவாதிகள், இந்தப் பகுதியில் அடிக்கடி, தாக்குதல் நடத்துவது வாடிக்கை. இதனால், கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 27 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்; 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X