ஸ்டாக்ஹோம்:கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை, அணு ஆயுத நாடுகள் குறைத்துள்ளன. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகள், அணு ஆயுதங்களின் அளவையும், திறனையும் அதிகரித்து வருகின்றன என, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டால், பல நுாறு ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில், புல், பூண்டு முளைக்காது. கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டு, கண்டறிய முடியாத நோய்களுக்கு, மக்கள் ஆளாவர்.அதனால், அணு ஆயுதங்களை போரில் பயன்படுத்தக் கூடாது என்பதை, சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், உலகில் பல நாடுகள், அணு ஆயுதங்களை, தங்கள் போர்க்கலன்களில் சேகரித்தபடியே உள்ளன. அதே நேரத்தில், சர்வதேச நிர்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின்படி, அமெரிக்கா மற்றும் ரஷ்யா, தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களை, படிப்படியாக குறைத்து வருகின்றன. அந்த இரு நாடுகள் வசம் மட்டும், உலகின், 90 சதவீத அணு ஆயுதங்கள் உள்ளன. அதுபோல, வேறு பல நாடுகளும், தங்களின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. கடந்த, 80களில், உலக நாடுகளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டில், 13 ஆயிரத்து, 865 ஆயுதங்கள் மட்டும் தான் உள்ளன.ஆனால், ஆசிய நாடுகளான, இந்தியா, பாகிஸ்தான், சீனா, அணு ஆயுதங்களின் செயல்திறனையும், அளவையும் அதிகரித்து வருகின்றன. இது, புதிய அபாயமாக கருதப்படுகிறது.
இதை, 'சிப்ரி' எனப்படும், ஸ்டாக்ஹோம் சர்வ தேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஸ்டார்ட் ஒப்பந்தம், 'பணால்'உலக நாடுகளுக்கு இடையே, அணு ஆயுத பரவலை தடுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த ஆண்டுடன், 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த ஒப்பந்தத்தை புதிதாக மேற்கொள்ள, பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.அதுபோல, 'ஸ்டார்ட்' எனப்படும், அமெரிக்கா - ரஷ்யா இடையேயான, ஆயுதங்கள் குறைப்பு ஒப்பந்தம், 2021ல் காலாவதி ஆகிறது. அதையும் புதிதாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே, பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அணு ஆயுத ஒப்பந்தங்கள் காலாவதியாவது, உலக அமைதி அமைப்பு களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா அடம்அமைதியை விரும்பும் உலக நாடுகளின் தலைவர்களும், அதற்கான சர்வதேச அமைப்பினரும், அணு ஆயுதம் இல்லாத உலகை ஏற்படுத்த, கடின முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அவர்களின் நிர்பந்தங்களுக்கு பணிந்து, அமெரிக்க, ரஷ்யா நாடுகள், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைத்து வந்தன.ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப், நடுத்தர வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன் எதிரி நாடான ரஷ்யாவும், அந்த ஒப்பந்தத்தை இனிமேல் மதிக்கப் போவதில்லை என, கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE