விடுதலையானார் சமூக ஆர்வலர்.. சூடு பிடிக்கும் ஹாங்காங் போராட்டம்| Dinamalar

விடுதலையானார் சமூக ஆர்வலர்.. சூடு பிடிக்கும் ஹாங்காங் போராட்டம்

Added : ஜூன் 18, 2019
Share
ஹாங்காங்:அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, ஹாங்காங்கில், அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க், நேற்று விடுதலை செய்யப்பட்டார். அதனால், போராட்டம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், 'வெளிநாடுகளால் தேடப்படும் குற்றவாளிகள் நாடு
 விடுதலையானார் சமூக ஆர்வலர்.. சூடு பிடிக்கும் ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங்:அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, ஹாங்காங்கில், அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க், நேற்று விடுதலை செய்யப்பட்டார். அதனால், போராட்டம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், 'வெளிநாடுகளால் தேடப்படும் குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவர்' என, புதிய மசோதா கொண்டு வரப்பட்டது. சீனாவின் நெருக்குதலால், அரசியல் ரீதியில் பழிவாங்க, இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக, பல்வேறு தரப்பினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எதிர்ப்புபோராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக, ஹாங்காங்கின், பெண் நிர்வாகி, கேரி லேம் அறிவித்தார். ஆனால், அதை ஏற்காத போராட்டக்காரர்கள், 'கேரி லேம் பதவி விலக வேண்டும்' என, வலியுறுத்தி, போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 2014ல், ஹாங்காங்கில் நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க், 22, நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த, 2014ல், தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கான முயற்சி நடந்தது.
அப்போது, மாணவர் இயக்கத் தலைவராக இருந்த வோங்க் தலைமையில், மிகப் பெரிய போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில், பங்கேற்றவர்கள், குடையுடன் சாலைகளில் குவிந்து, தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கில், கடந்த மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.கோரிக்கைஇந்நிலையில், நாடு கடத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தின்போது, வோங்கை விடுதலை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, சிறையில் இருந்து அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.நாடு கடத்தும் மசோதாவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக, அவர் கூறியுள்ளார். அதனால், ஹாங்காங் போராட்டம் மேலும் சூடிபிடிக்கத் துவங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X