பாக்., சமூக வலைதள ஆர்வலர் படுகொலை

Added : ஜூன் 18, 2019
Advertisement

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினருக்கு எதிராக, சமூக வலைதளங்களில், கருத்து பதிவிட்டு வந்தவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முகமது பிலான் கான் என்ற, 22 வயது இளைஞர், சமூக வலைதளங்களில் பிரபலமானவர். 'டுவிட்டர், பேஸ்புக், யுடியூப்' போன்றவற்றில், அவரின் கருத்துகளை, ஆயிரக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர்.அவரின் கருத்துகள், ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்புக்கு விரோதமாக இருந்ததால், அவருக்கு அரசு தரப்பில், எதிர்ப்பு நிலவி வந்தது.இந்நிலையில் நேற்று, வீட்டில் இருந்த அவரை, மர்ம நபர்கள் அழைத்துச் சென்று, அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றுஉள்ளனர்.இதை அறிந்ததும், 'பிலால் கான் படுகொலை' என்ற தலைப்பில், சமூக வலைதளங்களில், அவரின் ஆதரவாளர்கள், காரசாரமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்; பெரும்பாலும் அவை, அரசுக்கு எதிராகவே உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X