அணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement
அணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்

ஸ்டாக்ஹோம்,:ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.இந்த ஆண்டுக்கான கையேடு நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளது: சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டுள்ள நாடுகளில் பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களின் அணு ஆயுத இருப்பை அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்தியா 2018 ல் இருந்து 130 -140 அணு ஆயுதங்களையே தொடர்கிறது. அதிகரிக்கவில்லை.கடந்த ஆண்டு 280 அணு ஆயுதங்களை வைத்திருந்த சீனா, இந்த ஆண்டு 290 ஆகவும், 140 -150 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் 160 ஆகவும்,80 லிருந்து இஸ்ரேல் 90 ஆகவும் தமது அணு ஆயுதங்களை உயர்த்தியுள்ளன. 2018 ல் 10 -20 அணுகுண்டுகளை வைத்திருந்த வடகொரியா தற்போது 30 அணுகுண்டுகளை வைத்துள்ளது.






2018 ல் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா என 9 நாடுகளின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 14,465. இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கையில் 600 குறைந்து, 3,750 அணு ஆயுதங்களாக உள்ளன. இவற்றில் 2 ஆயிரம் அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
deepak - chennai,இந்தியா
18-ஜூன்-201909:38:00 IST Report Abuse
deepak 130 அணு ஆயுதங்களே அதிகம் பல நாடுகளில் மனித குலத்தை அழிப்பதிற்கு. இன்னும் அதிகரித்தால் அந்த ஆயுதங்களை பாதுகாக்கவே பல கோடிகளில் செலவு ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
18-ஜூன்-201904:55:29 IST Report Abuse
 nicolethomson எண்ணத்தை சொல்றது
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
18-ஜூன்-201903:54:27 IST Report Abuse
blocked user வட கொரிய சீனா போல கதை மட்டும் விட்டுக்கொண்டு இருக்கிறது. பாக்கிகளிடமும் வெடிக்கும் அளவில் இருப்பது தீவிரவாத மூளை ஒன்றே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X