பொது செய்தி

தமிழ்நாடு

2 ஆண்டுகளில் டீசல் விலை மட்டும் உயர்வு

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (11)
Advertisement

சென்னை: பெட்ரோல் டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலாகி இரு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 10 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.


பொதுத்துறையை சேர்ந்த 'இந்தியன் ஆயில் பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் சமையல் காஸ் சிலண்டர் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இவை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒரு மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்தன. பின் அந்த விலையை தினசரி நிர்ணயிக்க முடிவு செய்தன.

அதன்படி இத்திட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்; புதுச்சேரி மாநிலங்களில் சோதனை ரீதியாக 2017 மே 1ல் துவக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகளிடம் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அத்திட்டம் அதே ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி அன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02 ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் டீசல் 57.41 ரூபாய்க்கும் விற்பனையானது. இவற்றின் விலை இன்று(ஜூன் 18) முறையே 72.64 ரூபாய் மற்றும் 67.52 ரூபாய் என்றளவில் இருந்தது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தியபோது பெட்ரோல் டீசல் விலை மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அந்த முறை அமலாகி தற்போது இரு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.62 ரூபாயும்; டீசல் விலை 10.11 ரூபாயும் அதிகரித்துள்ளது. இது ஆண்டுதோறும் அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதுபோல் மிதமான விலை உயர்வு தான். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-201909:48:55 IST Report Abuse
ஆரூர் ரங் அறியாமையில் ஏதோ எழுதணும்னு நெனச்சு இங்கு குளறியிருப்பவர்களுக்கு நடுநிலை ஊடக செய்திகள்.1. NDA has built 33,361 km of highways in four-and-half-years. On the other hand, UPA constructed 33,038km in seven years between FY08 and FY14 . 2. உணவு விலைவாசிக்கணக்கில் பிராண்டு பெயரில்லாமல் பொதுப்பெயரில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலையே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆடம்பர கோக், ஹார்லிக்ஸ் , காம்பிளான் விலைகளல்ல . 3.  The NDA government repaid over Rs 2 lakh crore, including Rs 70,000 crore interest, which was taken as loan through oil bonds by the previous Congress government at the Centre, Union Petroleum
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
18-ஜூன்-201908:13:44 IST Report Abuse
பாமரன் வெளக்கமெல்லாம் நல்லாத்தான் கீதுபா.... தினசரி விலையேற்றத்தை மக்கள் ரசிச்சதா சொன்னதுதான் ஹைலைட்டே... சரி அதை விடுவோம்... அப்போ கச்சா எண்ணெய் விலையை இப்போதைய விலையோடு ஒப்பிட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.... என்னது அதெல்லாம் காங்கிரஸ் ஆண்டால்தானா...??? சரிங்க ஆபீஸர்...
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-201907:35:42 IST Report Abuse
Allah Daniel காங்கிரஸ் ஆட்சியில் கட்சா எண்ணெய் விலையைவிட பிஜேபி ஆட்சியில் விலை ஜாஸ்தி..37 DMK MP சொத்தை வித்தாவது முதல நகை கடன் மற்றும் கல்வி கடனை தள்ளுபடி பண்ண சொல்லு..
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
18-ஜூன்-201908:08:28 IST Report Abuse
JIVANஐயோ இதுங்கெல்லாம் எந்த கிரகத்தில் இருந்து வந்துச்சுனே புரியலையே .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X