ரேஷன் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

Added : ஜூன் 18, 2019
Share
ரேஷன் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

சென்னை: ஊதிய உயர்வு வழங்காமல், அரசு, தாமதம் செய்வதாக கூறி, ரேஷன் ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில், ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசுக்கு, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பரிசீலிக்க, அந்த கடைகளை நடத்தும், கூட்டுறவு துறை, கூடுதல் பதிவாளர் ஒருவர் தலைமையில், குழு அமைத்தது.அந்த குழு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து, ஐந்து மாதங்களாகியும், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து, ரேஷன் ஊழியர்கள், தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X