பொது செய்தி

தமிழ்நாடு

2 நாட்களுக்கு அனல் அடிக்கும்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை வானிலை மையம், அனல் காற்று, மாவட்டங்கள், தமிழகம்

சென்னை: 'தமிழகத்தில், 12 மாவட்டங்களில், இன்றும், நாளையும் (ஜூன் 18, 19) அனல் காற்று வீசும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவ மழை, துவங்கிய, சில நாட்களிலேயே நின்று விட்டது. அதனால், மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசுகிறது. இன்றும், நாளையும், 12 மாவட்டங்களில், அனல் காற்று வீசும். திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அனல் அடிக்கும்.

மதுரை, சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகும். அதேபோல், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுட்டி பையன், மதுரை இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டு இருப்பீங்க.... முடியல
Rate this:
Share this comment
Cancel
Sweety - CHENNAI,இந்தியா
18-ஜூன்-201910:54:05 IST Report Abuse
Sweety திண்டுக்கல் னு ரெண்டு இடத்துலயும் சொல்லி இருக்கீங்க? மழை ஆஹ்? இல்லை வெயில் ஆஹ்?
Rate this:
Share this comment
Cancel
Sweety - CHENNAI,இந்தியா
18-ஜூன்-201910:50:52 IST Report Abuse
Sweety மழை ஆஹ் ? இல்லை வெயில் ஆஹ் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X