சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீருக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்த குழந்தை

Added : ஜூன் 18, 2019
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, குடிநீருக்கு தோண்டப்பட்ட குழியில், தவறி விழுந்த, 2 வயது குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது.
புதுக்கோட்டை, வைத்தூர் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து, இரு நாட்களுக்கு, ஒருமுறை, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அழுத்தம் பற்றாகுறையால், குழாய்களில், குடிநீர் வருவதில்லை. அதனால் ஆங்காங்கே, குழாய் அருகே, குழி வெட்டி, அதில் இறங்கி, மக்கள் குடிநீர் சேகரிக்கின்றனர்.இதனால், இரவு நேரங்களில், அவ்வழியே பயணிக்கும் மக்கள், குழி இருப்பது தெரியால், அதில் விழுந்து, காயமடைகின்றனர். இந்நிலையில், 15ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, வைத்தூர் பகுதியில், மழை பெய்ததால், குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிகளில், மழைநீர் நிரம்பியது.மழை நின்றபின், அப்பகுதியைச் சேர்ந்த, சந்திரசேகர், வெண்ணிலா தம்பதியின், 2 வயது பெண் குழந்தை, பவதாரிணி, தவழ்ந்து சென்று, தண்ணீர் பிடிப்பதற்காக, தோண்டப்பட்டிருந்த, 5 அடி குழியில், தவறி விழுந்து, உயிரிழந்தது. இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், நேற்று முன்தினம் மாலை, குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து, குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X