1 கிலோ தங்கம், ரூ.19 லட்சம்: திருச்சி ஏர்போட்டில் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1 கிலோ தங்கம், ரூ.19 லட்சம்: திருச்சி ஏர்போட்டில் பறிமுதல்

Added : ஜூன் 18, 2019

திருச்சி: சார்ஜாவில் இருந்து, நான்கு பேர் கடத்தி வந்த, 1 கிலோ தங்கத்தை, திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரபு நாடுகளில் ஒன்றான, சார்ஜாவில் இருந்து, நேற்று காலை, திருச்சி வந்த, 'ஏர் இந்தியா' விமான பயணியரிடம், கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினர்.அப்போது, சந்தேகப்படும் படியாக, 'நடந்த' நால்வரிடம் விசாரணை நடத்தினர். நால்வரும், ஆசன வாயில், தங்கத்தை மறைத்து, கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.இதையடுத்து, நான்கு பேரின் ஆசன வாயில் இருந்து, 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.1 கிலோ தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது ரபீக், முகமது ரிகாஸ் அலி, முகமது முஸ்தபா, முகமது ஹசீர் ஆகிய, நான்கு பேரிடமும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வெளிநாட்டு கரன்சிநேற்று முன்தினம் இரவு, திருச்சியில் இருந்து, 'ஏர் ஏசியா' விமானத்தில், மலேஷியா செல்லவிருந்த பயணியரின் உடைமைகளை, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்ற பயணியின், டிராலி பேக்கின் அடிப்பாகத்தில், சவுதி அரேபியா, ஜப்பான், மலேஷியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கரன்சிகள் மறைத்து, கடத்த முயன்றது தெரிந்தது.மொத்தம், 19.24 லட்சம் ரூபாய் மதிப்பில் இருந்த, வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல், செய்த அதிகாரிகள்,அப்பாஸ் அலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X