சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் போலீசார் வசூல் கெடுபிடி

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement
மதுரை, போலீஸ், வசூல்,கெடுபிடி ,Madurai,மதுரை

மதுரை: மதுரையில் சோதனை என்ற பெயரில் வசூல் கொடிகட்டி பறக்கிறது. பகல் இரவு பாராது அயராது உழைப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 24 மணி நேரமும் வசூல் செய்வதையே மதுரை போலீசார் தொழிலாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன சோதனை என்ற பெயரில் செக் அப் செய்து விட்டு பைன் போடுவோம், லைசென்சை ரத்து செய்வோம் என மிரட்டுகின்றனர். தொடர்ந்து பேரம் பேசப்படுகிறது. " இருப்பதை கொடுத்து விட்டு பைக்கை எடுத்து விட்டு போ என முடிக்கின்றனர் " .
இவ்வாறு மதுரை நகரம் மற்றும் புறநகர் என ஆங்காங்கே போலீசார் கைவரிசையை காட்டுகின்றனர். அதிலும் சட்டம் ஒழுங்கு போலீசார் தான் வாகனங்களை மறிப்பது , சோதிப்பது என நடக்கிறது. டூ வீலரை நிறுத்தும் போலீசார் கார் மற்றும் பெரிய வாகனங்களை சோதிப்பதில்லை. இது பெரிய இடத்து விவகாரம் பா என ஒதுங்கி கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு மேல் போலீசார் ரோந்து செல்வதாக வசூலை துவக்கி விடுவர். ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஏதாவது சொல்லி மிரட்டி கிடைக்கும் அளவிற்கு வசூலை முடித்து விட்டு தங்களின் ஸ்டேஷனுக்கு சென்று விடுவர். இதுபோல் ஸ்டேஷன்களிலும் சிறிய சிறிய வழக்குகளில் சிக்குவோரிடம் பேரம் பேசி பைசல் செய்யப்படுகிறது.

சோதிக்கட்டும், ஆனால் வாகன சோதனை மட்டும்தான் இவர்களது பணியா ? இதற்கு உதாரணமாகத்தான் மதுரையில் நேற்று நடந்த டயர்ஸ் உரிமையாளர் விவேகானந்தகுமார் மரணத்தை கூறலாம். இன்னும் பலர் பாதிக்காமல் இருக்க உயர் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பார்களா ?

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-201915:04:01 IST Report Abuse
Diya Growing stomach and living carefree luxury life in others money. These kind of people make others also do the same so that they do not get caught alone. Such kind of shameless people are everywhere. Even parents and siblings are like these, what to do with outsiders. They use respecting elders, duty, sharing the money with the ones who have less money as their keywords to make the victim always keep donating money. The victim might be suffering with less comfortable and hard working life while those money suckers will be enjoying tours, good food, show offs, etc. Such people do not know the meaning of self respect. It is either in their blood or trained from young age. What to do with those people who do not think it as a mistake, and instead think it as their rights to avail.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஜூன்-201914:51:11 IST Report Abuse
A.George Alphonse Vadi Velu has acted very Nicely in one Tamil movie as a traffic police and shown what these policemen are doing ly.These people won't change even after seeing such movies and also reading such news in Tamil dailies.
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
18-ஜூன்-201913:02:40 IST Report Abuse
Muthukumaran ஆமாம், சீருடை பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X