காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

அனந்தநாக்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் மேஜர் ஒருவர் கொல்லப்பட்டார். பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி துரிதப்படுத்தப் பட்டுள்ளது.



latest tamil news



அனந்தநாக் மாவட்டத்தில் பிஜிபாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் கேதான் சர்மா வீர மரணம் அடைந்தார். தொடர்ந்து கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



சர்மா கடந்த 2012 ல் டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்தவர். புனேயில் இருந்து காஷ்மீருக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டு ஆகிறது. இளம் துடிப்பான அதிகாரி மரணம் ராணுவத்தினருக்கு பேரிழப்பு என்கின்றனர் சக அதிகாரிகள்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
18-ஜூன்-201910:27:25 IST Report Abuse
Nallavan Nallavan வீரத்துக்குத் தலை வணங்குகிறேன் ...... நற்கதி கிடைக்கட்டும் .............
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
18-ஜூன்-201910:25:34 IST Report Abuse
GMM நாட்டின் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள். மேஜர் வீர மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
18-ஜூன்-201910:04:25 IST Report Abuse
agni எப்படியாவது இந்த காஷ்மீர்,பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுக்கு சீக்கரம் நிரந்தர முடிவு கட்டுகள், எத்தனை காலம் தான் நமக்காக எத்தனை இளம் வீரர்கள் இப்படியே உயிர் தியாகம் செய்வர், நம் இளம்வீரர்களும் இந்த உலகில் நீண்ட காலம் வாழ வேண்டும்.ஓயாத இந்த பிரச்னைக்கு நாம் எத்தனை இளம் இரத்தங்களை, உயிர்களை இழப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X