ஜி 20 உச்சி மாநாடு: டிரம்ப் - மோடி சந்திக்க வாய்ப்பு

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஒசாகா : ஜி20 உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் சந்தித்து, வர்த்தக விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



ஜப்பானின் ஒசாகாவில் வரும் 28 மற்றும் 29ம் தேதி ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசுகிறார். அதே சமயத்தில், இந்தியா - அமெரிக்கா- ஜப்பான் நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.


latest tamil news



இதில் இருநாடுகள் இடையேயான வர்த்தக விவகாரம் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை சமீபத்தில் அமெரிக்கா பறித்தது மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-201916:17:24 IST Report Abuse
ஆப்பு ஹார்லி டேவிட்சனை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டுவர பேசுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X