பொது செய்தி

இந்தியா

வெயில் உக்கிரம்: பீகாரில் 130 பேர் பலி

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாட்னா: கோடை வெயில் இன்னும் முடிந்த பாடில்லை. கொடுமையான கோடை வெப்பத்திற்கு பீகாரில் 130 பேர் பலியாகி உள்ளனர். கயா மாவட்டத்தில் மக்கள் மாலை 4 மணி வரை வெளியே வரக்கூடாது என கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.வரலாறு காணாத கோடை வெயிலால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாட்னா: கோடை வெயில் இன்னும் முடிந்த பாடில்லை. கொடுமையான கோடை வெப்பத்திற்கு பீகாரில் 130 பேர் பலியாகி உள்ளனர். கயா மாவட்டத்தில் மக்கள் மாலை 4 மணி வரை வெளியே வரக்கூடாது என கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.latest tamil newsவரலாறு காணாத கோடை வெயிலால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
வட மாநிலங்களிலும் வெயில் கொடுமை அதிகரித்துள்ளது. பீகாரில் கடந்த 2 நாட்களாக அதீத வெயில் மக்களை வாட்டி வருகிறது. 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. கயா, பாட்னா, பகல்பூரில் இது வரை 130 பேர் இறந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வெயில் மேலும் அதிகரிக்கும் என வானிலை கூறுகிறது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsபீகாரில் ஏற்கனவே மூளைக்காய்ச்சலுக்கு 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் வெயில் கொடுமை வேறு வாட்டி வதைக்கிறது.


தமிழகத்தில் அனல் காற்று


தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
18-ஜூன்-201914:44:38 IST Report Abuse
pattikkaattaan இங்கு ஓமான் பாலைவனத்தில் மதிய வேளையில் 120 டிகிரிவரை வெயில் அடிக்கிறது .. இந்தியாவும் அதுபோல ஆகிவிடுமோ ?.. அய்யகோ ..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-ஜூன்-201912:31:48 IST Report Abuse
Ramesh Sargam இந்த வெய்யிலின் தாக்கத்தினால் நாடுமுழுவதும் எத்தனை பேர் மடிந்தார்களோ, எத்தனை விலங்குகள் இறந்தனவோ? ஐயோ, இறைவா என்ன கொடுமை இது. உனக்கு மக்களின் மீது இரக்கம் இல்லையா, மற்ற உயிரினங்களின் மீது இரக்கம் இல்லையா? மக்களிடமும் தவறுகள் உள்ளன. காடுகளை அழித்தல், நீர்நிலைகளை அழித்து கட்டடங்களை கட்டுதல், சிக்கனமாக தண்ணீர் செலவழிக்காமல், கண்டபடி வீணாக்குதல். ஆகையால், நாம் இறைவனை குறை சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை. நாம்தான் முதலில் திருந்தவேண்டும். செய்யும் அக்கிரமங்களை எல்லாம் செய்து விட்டு, பிறகு ஐயோ இறைவா இப்படி எங்களை வாட்டி வதைக்கிறாயே என்றால், அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்??
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-ஜூன்-201912:30:17 IST Report Abuse
Ramesh Sargam இந்த வெய்யிலின் தாக்கத்தினால் நாடு முழுவதும் எத்தனை பேர் மடிந்தார்களோ, எத்தனை விலங்குகள் இருந்தனவோ? ஐயோ, இறைவா என்ன கொடுமை இது. உனக்கு மக்களின் மீதி இரக்கம் இல்லையா, மற்ற உயிரினங்களின் மீது இரக்கம் இல்லையா? மக்களிடமும் தவறுகள் உள்ளன. காடுகளை அழித்தல், நீர்நிலைகளை அழித்து கட்டடங்களை கட்டுதல், சிக்கனமாக தண்ணீர் செலவழிக்காமல், கண்டபடி வீணாக்குதல். ஆகையால், நாம் இறைவனை குறை சொல்லி எந்த பிரயோசனம் இல்லை. நாம்தான் முதலில் திருந்தவேண்டும். செய்யும் அக்கிரமங்களை எல்லாம் செய்து விட்டு, பிறகு ஐயோ இறைவா இப்படி எங்களை வாட்டி வதைக்கிறாயே என்றால், அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X