பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் 2 நாளில் வழங்கப்படும்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
செங்கோட்டையன், பாடப்புத்தகங்கள்

சென்னை: தமிழகத்தின் பள்ளிகளில், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் இன்னமும் 2 நாட்களுக்குள் வழங்கப்பட்டுவிடும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், ''தண்ணீர் பிரச்னை காரணமாக தமிழகத்தில் எந்த பள்ளியும் மூடப்படவில்லை. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் முறை தொடரும்.

கல்வியாளர்கள் சிலர், மேல்நிலை வகுப்புகளுக்கு 5 பாடங்களாக மாற்றும் யோசனையை கூறியுள்ளனர். இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை பெற்று ஆன்லைனில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு இறுதி செய்யப்படும். ஆனால், தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றம் செய்வது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
பள்ளிகளில் தண்ணீரில்லாமல் கழிவறைகள் மூடப்பட்டதாக வந்த தகவல்களில் உண்மையில்லை. இன்னும் 2 நாட்களுக்குள் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vetri - NELLAI,இந்தியா
18-ஜூன்-201913:03:11 IST Report Abuse
vetri பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு, 10ம் வகுப்பு, 7, 8, 9 வகுப்பு புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. ஆனால், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எல்லாம் தனியார் மயம்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X