பதவி ஏற்பில் பலவிதமாய் முழங்கிய தமிழக எம்.பி.,க்கள்

Updated : ஜூன் 18, 2019 | Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (102)
Advertisement

புதுடில்லி : இந்தியாவின் 17 வது லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.,க்கள் இன்று (ஜூன் 17 )தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவரும் ஒரு விதமாய் கோஷம் எழுப்பினர்.





லோக்சபா எம்.பி.,க்களுக்கு நேற்றும் இன்றும் தற்காலி சபாநாயகர் விரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் பல்வேறு மாநில எம்.பி.,க்களும் அவரவர் தாய்மொழியில் பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தின் எம்.பி.,க்கள் தாய்மொழியான தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

பதவிப் பிரமாணத்தை பலர் இறைவன் பெயராலும், பலர் உளமார உறுதி கூறுவதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர், பா.ஜ., எம்.பி.,க்கள் பலர் இறுதியில் 'பாரத் மாதா கீ ஜே' என்று முழங்கினர். இந்த நிலையில் இன்று காலை பதவி ஏற்ற பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.பி., பகவத் மான் சிங் பதவிப்பிரமாணம் ஏற்ற பிறகு, 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழங்கினார். அதனை தொடர்ந்து பதவி ஏற்ற தமிழக தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும் 'தமிழ் வாழ்க,' 'திராவிடம் வெல்க,' என்று முழங்கினர். சிலர் 'கலைஞர் வாழ்க,' 'தமிழ் வாழ்க,' 'தளபதி வாழ்க' என்று முழங்கினர்.
காங்கிரஸ் எம்.பி.,க்கள் 'காமராஜர் வாழ்க' ; 'ராஜிவ் வாழ்க' என்றனர். கம்யூ., எம்.பி.,க்கள், 'தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க, மதச்சார்பின்மை வாழ்க, உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்று பதவி ஏற்புக்கு பின்னர் முழங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.,க்கள், 'அம்பேத்கர் வாழ்க' 'ஜனநாயகம் வெல்க, சமத்துவம் வெல்க,' என்று முழங்கினர். தேனி தொகுதி அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் குமார், 'எம்.ஜி.ஆர்.,வாழ்க, அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்' என்று முழங்கினார்.




தி.மு.க.,, எம்.பி.,க்கள் ஆ.ராசா மற்றும் பழனிமாணிக்கம் மட்டுமே பதவி ஏற்பு பிரமாண வாசகம் தவிர வேறெதுவும் முழங்கவில்லை. தமிழக எம்.பி.,க்கள் முழக்கங்கள் எழுப்பிய போது பா.ஜ.,எம்.பி.,க்கள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.


Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
23-ஜூன்-201917:59:53 IST Report Abuse
K.   Shanmugasundararaj நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கும்பொழுது தவறான செய்கைகளை செய்தது மோடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்.மேற்கு வங்கத்தின் , சகோதரி மம்தாவின் திரிணாமுல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்பொழுது , ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி முறைகேடாக நடந்த பொழுது இடைக்கால சபாநாயகர் ஒன்றும் சொல்லவில்லை , அவர்களை கட்டுப்படுத்தவும் இல்லை.அவையில் இருந்த பா ஜ க கட்சியின் நாடாளுமன்ற தலைவர் மோடி அவர்களாவது அவர்களை கட்டுப்படுத்தி இருக்கவேண்டும் . அத்தனையும் மோடி செய்யவில்லை. வழக்கம் போன்று அமைதியாக இருந்தார். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறியாக எடுத்து கொள்ளப்பட்டது. எனவே தான் மறுநாள் தமிழகம் மற்றும் பஞ்சாப் உறுப்பினர்கள் பதவி ஏற்ற பொழுது , அவர்கள் தங்களுக்கு விருப்பமான கோஷம் எழுப்பிய பொழுது , வம்புக்கு எதிர் கோஷம் பா ஜ க , மோடி கட்சி உறுப்பினர்களால் எழுப்ப / போட / பட்டது .அப்பொழுதும் மோடி அவர்களை கட்டுப்படுத்தவில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது பா ஜ க வினர் மோடியின் சம்மதத்துடன் தான் இவ்வாறு , வழக்கத்தில் இல்லாத , நாடாளுமன்ற செயலுக்கு எதிரான தரம் குறைந்த செயலான கோஷங்களை , பதவி ஏற்கும் நிகழ்வின் பொழுது எழுப்பி உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
22-ஜூன்-201914:52:46 IST Report Abuse
oce தமிழ் நாட்டில் திராவிடன் என எவரும் இல்லை. திராவிடத்தை பிடித்து தொங்கும் திமுக காரன் கூட அரசு கெசட்டில் அவன் ஆட்சியில் எங்கேயும் திராவிடர் திராவிடம் பற்றி குறிப்புகள் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
22-ஜூன்-201914:47:48 IST Report Abuse
oce அம்மா வாழ்க சொல்வதில் அர்த்தமிருக்கு.தளபதி வாழ்க சொல்வதில் அர்த்தமிருக்கா.அவர் எந்த படைக்கு தளபதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X